LOADING...
தமிழ்நாடு தேர்தல் 2026: ஏப்.10 முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் - தேர்தல் ஆணையம்!
ஏப்.10 முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் 2026: ஏப்.10 முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் - தேர்தல் ஆணையம்!

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 05, 2026
02:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி மற்றும் வரிசை எண்குறித்த தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) விநியோகிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பணிகளை விரைந்து முடிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) விநியோகிக்கும் பணி ஏப்ரல் 10, 2026. தொடங்கி ஏப்ரல் 17, 2026. முடிவடையும். அந்தந்தப் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) உங்கள் வீடுகளுக்கே நேரடியாக வந்து இந்தச் சீட்டுகளை வழங்குவார்கள்.

வாக்காளர் தகவல் சீட்டில் என்ன இருக்கும்?

வாக்குச்சாவடி விவரங்கள்:

முன்பு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுக்கு (Photo Voter Slip) மாற்றாக இந்தத் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் வரிசை எண். வாக்குச்சாவடியின் (Poling Station) பெயர் மற்றும் முகவரி. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் நேரம். வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தைக் கண்டறிய உதவும் QR குறியீடு (சில இடங்களில்). இந்தத் தகவல் சீட்டு உங்கள் வாக்குச்சாவடியைக் கண்டறிய மட்டுமே உதவும். வாக்களிக்கச் செல்லும்போது இதனுடன் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (EPIC Card) அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 இதர அடையாள ஆவணங்களில் (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவை) ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள்

தேர்தல் தேதிகள்

தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மே மாதம் 4-ஆம் தேதி வெளியாக உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளமான elections.tn.gov.in மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Advertisement