முடிவுக்கு வந்த இழுபறி: திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கையெழுத்தானது. பல வாரங்களாக நீடித்து வந்த இழுபறிக்குப்பிறகு, இரு கட்சிகளுக்கும் இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடமும் வழங்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக 36 தொகுதிகள் காங்கிரஸ் கோரியிருந்த நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. TVK உடன் காங்கிரஸ் இணையக்கூடும் என்றஎன்ற பேச்சு எழுந்த நிலையில், ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதைதொடர்ந்து சுமுகமான முடிவு எட்டப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | காங்கிரஸ்க்கு 28 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கியது திமுக#SunNews | #TNElection2026 | #DMK | #Congress pic.twitter.com/M53es92Aaz
— Sun News (@sunnewstamil) March 4, 2026