LOADING...
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; அண்ணாமலை போட்டியிடவில்லை; 27 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியல்
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; அண்ணாமலை போட்டியிடவில்லை; 27 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியல்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 03, 2026
02:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. கடந்த ஒரு வாரமாகவே அவர் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அவர் போட்டியிடாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூத்த தலைவர்கள்

முக்கியத் தொகுதிகளில் களம் காணும் மூத்த தலைவர்கள்

இந்த வேட்பாளர் பட்டியலில் பாஜகவின் பல முக்கியத் தலைவர்கள் நட்சத்திரத் தொகுதிகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். கோவை வடக்கு தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீண்டும் களம் காண்கிறார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவினாசி (தனி) தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூத்த தலைவர்களின் வருகை அந்தந்த தொகுதிகளில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement