தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிய திருமாவளவன்: விசிக தொண்டர்கள் அதிர்ச்சி; திடீர் முடிவின் பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ள ஒரு முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் காட்டுமன்னார் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் அவர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாநில அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திடீர் பின்வாங்கல் அக்கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவருக்குப் பதிலாக மறைந்த தலைவர் இளைய பெருமாளின் இளைய மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என அவர் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை - திருமாவளவன்
— PttvOnlinenews (@PttvNewsX) April 4, 2026
#VCK | #Thirumavalavan | #Kattumannarkoil pic.twitter.com/TrXNHH5Ibf