தவெக தலைவர் விஜய்க்கு பின்னடைவா? பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக வெளியாகி வரும் செய்திகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
TVK Chief Vijay has to revamp his team asap.
— Arvind Gunasekar (@arvindgunasekar) April 2, 2026
In his nomination affidavit for Perambur constituency (Picture 1), Vijay declared that there were no criminal cases pending against him while in his affidavit for Trichy East Constituency, he has declared a pending case dated 2025… pic.twitter.com/Pic8LhtOgl
குளறுபடிகள்
வேட்புமனுவில் உள்ள குளறுபடிகள் என்ன?
விஜய் தனது வேட்புமனுக்களில் அளித்துள்ள தகவல்களே இந்த சிக்கலுக்கு காரணமாகத் தெரிகிறது. பெரம்பூர் தொகுதியில் அவர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், தன் மீது எந்த ஒரு கிரிமினல் வழக்கும் நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே வேளையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரே வேட்பாளர் இரு வேறு தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் இவ்வாறு முரண்பட்ட தகவல்களை அளிப்பது தேர்தல் விதிமுறைகளின்படி தவறானதாகும்.
தேர்தல் விதிமுறை
தேர்தல் விதிமுறைகளும் நிராகரிப்பு அபாயமும்
தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் தனது பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) உண்மையான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும். தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களைத் தருவது வேட்புமனு நிராகரிப்பிற்கு இட்டுச் செல்லும். விஜய்யின் விஷயத்தில், ஒரு தொகுதியில் வழக்கைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு, மற்றொரு தொகுதியில் அதனைக் குறிப்பிடாமல் இருந்தது "தகவல்களை மறைத்தல்" என்ற பிரிவின் கீழ் வரக்கூடும். இதுவே பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் சிக்கலை உருவாக்கியுள்ளது.
சிக்கல்
சிக்கலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதா?
விஜய்க்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். அதற்கு முன்பாக, பெரம்பூர் தொகுதியிலும் தனது வழக்கைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால், இந்த சிக்கலில் இருந்து அவர் தப்பிக்க முடியும். அவ்வாறு திருத்தப்பட்ட மனுத் தாக்கல் செய்யப்படாவிட்டால், ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் வேட்புமனு பரிசீலனையின் போது அவரது மனு நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.