உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

23 Aug 2024

நேபாளம்

நேபாளத்தில், இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்தததில் 11 பேர் கொல்லப்பட்டனர் 

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியப் பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்; அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் கமலா ஹாரிஸ்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்பதை அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

தென்னாபிரிக்காவின் போட்ஸ்வானாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் இதுவே மிக பெரிய வைரமாகும்.

22 Aug 2024

சீனா

உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சையினால் ஊனமுற்ற சீன இளைஞர்கள் 

கால் எலும்புகளை உடைத்து, உயரத்தை அதிகரிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை சீனாவில் பரவலான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

22 Aug 2024

ஸ்வீடன்

26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஸ்வீடன் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவு

கடந்த இருபது ஆண்டுகளாக ஸ்வீடனுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையை விட, அங்கிருந்து வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளது.

ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்த வங்காளதேசம்

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், ஷேக் ஹசீனா உட்பட அவரின் அரசில் பதவியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.க்கள்) வழங்கப்பட்ட அனைத்து டிப்ளமேடிக் பாஸ்போர்ட்களையும் ரத்து செய்துள்ளது.

குரங்கம்மை பரவல்: இந்த நாடுகள் விரைவில் தடுப்பூசிகளை வெளியிடும்

ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (ஆப்பிரிக்கா CDC) Mpox வைரஸுக்கு எதிராக உடனடி தடுப்பூசி பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.

உக்ரைனில் பிரதமர் மோடி பயணம் செய்யவிருக்கும் ராணுவ ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணத்தை உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

டிரம்பின் அமைச்சரவையில் பணிபுரிய தயாராகும் எலான் மஸ்க்..ஆனால் இந்த அமைச்சரவை தான் வேண்டும்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொழில்நுட்ப பில்லியனர் எலான் மஸ்க்கிற்கு அமைச்சரவை பதவி அல்லது ஆலோசனைப் பங்கை வழங்குவேன் என்று கூறினார்.

19 Aug 2024

சீனா

தொலைந்து போன 8 வயது சீன சிறுமி, ATM உதவியுடன் குடும்பத்தைக் கண்டுபிடித்த அதிசயம்

சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி காணாமல் போனதும் உதவி பெற ஏடிஎம்மைப் பயன்படுத்தியுள்ளார்.

ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்

ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

18 Aug 2024

ரஷ்யா

7.0 ரிக்டர் அளவு; ரஷ்யாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்; எரிமலை வெடிப்பு

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அதிகாலை ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரு பெரிய கடற்படைத் தளத்திற்கு அருகில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

என்னா அடி! நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு; வைரலாகும் காணொளி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், துருக்கி நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை களேபரமாக மாறியது.

பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல்முறையாக பேசினார்.

நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார்.

16 Aug 2024

வைரஸ்

ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி

நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இ

இஸ்ரேல்-ஹமாஸ் ஆதரவு போராட்டத்தை மோசமாக கையாண்ட கொலம்பியா பல்கலைக்கழக தலைவர் ராஜினாமா

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தலைவர் மினூச் ஷஃபிக், இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் பிரிவினைகளை மோசமாகக் கையாண்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டதையடுத்து ராஜினாமா செய்துள்ளார்.

15 Aug 2024

வைரஸ்

Mpox பரவல்: 2 ஆண்டுகளில் 2வது முறையாக உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அதிரடியாக பதவி நீக்கம்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை நெறிமுறை மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.

"இதுதான் காதல் என்பதா?!": ரொமான்டிகாக காதலை வெளிப்படுத்திய மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க் 

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது காதல் மனைவி பிரிசில்லா சானின் மாபெரும் சிற்பத்தை அவர்களது வீட்டின் பின்புறத்தில் நிறுவியுள்ளார்.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் விமான பயண வழக்கங்கள் என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணிடமிருந்து புதிதாக கிடைக்கப்பெற்ற குறிப்புகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுப்பயணத்தின் போது விமானத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை வெளியிட்டன.

எனது தந்தை, மற்ற தியாகிகள் கடுமையாக அவமதிக்கப்பட்டனர்: மௌனம் கலைத்த ஷேக் ஹசினா

பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டார்.

காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர் 

காஸாவில் நடந்து வரும் போரின் விளைவாக இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியுள்ளன.

13 Aug 2024

ஈரான்

மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை

இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் ஈரான் அல்லது மத்திய கிழக்கில் அதன் பினாமிகளால் நடத்தப்படும் குறிப்பிடத்தக்க தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராகிவிட்டதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

இரும்பு குவிமாடம், ஈரான் போர், கமலா ஹாரிஸ், கிம் ஜாங்: எலான் மஸ்க்- டிரம்ப் உரையாடலின் ஹைலைட்ஸ்

பில்லியனர் தொழிலதிபரும், X (முன்னர் ட்விட்டர்) உரிமையாளருமான எலான் மஸ்க் இன்று தனது சமூக ஊடக வலையமைப்பில் டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்தார்.

அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடனின் விலகல் ஒரு நாடகம்: டிரம்ப் குற்றசாட்டு 

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், இன்று X இல் தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் நேர்காணலில் கலந்துக்கொண்டார்.

ஊழல் வழக்கில் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானில் முன்னோடியில்லாத வகையில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அந்நாட்டின் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஃபைஸ் ஹமீதை ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

7 நாட்களில் சட்டவிரோத ஆயுதங்களை கைவிடுங்கள்: போராட்டக்காரர்களிடம் வங்கதேச இடைக்கால அரசு

பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை ஆலோசகர் (ஓய்வு) பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) எம் சகாவத் ஹுசைன் திங்களன்று போராட்டக்காரர்களை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்- எலான் மஸ்க் நேர்காணல்: எங்கே எப்படி பார்க்கலாம்?

கோடீஸ்வரர் எலான் மஸ்க் திங்களன்று, முன்னாள் அமெரிக்க அதிபரும், இந்தாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்புடனான நேர்காணலுக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி

மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்

பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல்

ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியை ராஜினாமா செய்யவில்லை என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் கூறியுள்ளார்.

09 Aug 2024

ஈராக்

பெண்களுக்கான திருமண வயதை 9 ஆகக் குறைக்கும் சட்டத்தை முன்மொழியவுள்ள ஈராக்

ஈராக் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட மசோதாவின் படி, பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை வெறும் 9 வயதாகக் குறைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல்

வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில் சமீபத்தில் இந்தியாவுக்கு தப்பியோடிய பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதிய இடைக்கால அரசு தேர்தலை அறிவித்தவுடன் சொந்த நாட்டிற்கு திரும்புவார் என அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியைத் தூண்டிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி யாருடையது?

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வியாழன் அன்று பதவியேற்கவுள்ளதால், பங்களாதேஷ் தற்போது குறிப்பிடத்தக்க அரசியல் நெருக்கடியின் உச்சத்தில் உள்ளது.

குரங்கு நோய் பற்றிய WHO இன் அவசர கூட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் 

ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலால் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) பரிசீலித்து வருகிறது.

08 Aug 2024

இத்தாலி

கடற்கரை உரிமைக்காக இத்தாலியர்கள் ஏன் போராடுகிறார்கள்?

ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய சட்டம் இத்தாலியில் நாட்டின் கடற்கரைகளுக்கு இலவச அணுகல் உரிமை பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன

இந்த வார தொடக்கத்தில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு காரணமாக பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.