ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்; அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் கமலா ஹாரிஸ்
2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்பதை அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் தற்போது குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து முறைப்படி போட்டியிடுகிறார். 81 வயதான ஜனாதிபதி ஜோ பிடன் கடந்த மாதம் போட்டியில் இருந்து விலகிய பின்னர் துணை ஜனாதிபதியாக இருந்த கமலா ஹாரிஸ் ஒருமனதாக ஏற்றுக் கொல்லப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாறு படைப்பார். சிகாகோவின் ஐக்கிய மையத்தில் நடைபெற்ற ஜனநாயக தேசிய மாநாட்டின் போது ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்த கமலா ஹாரிஸ்
தனது வேட்பாளர் நியமனத்தை ஏற்று பேசிய கமலா ஹாரிஸ், "கட்சி, இனம், பாலினம் அல்லது உங்கள் பாட்டி பேசும் மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாகவும், உலகின் மிகப்பெரிய தேசத்தில் மட்டுமே கதை எழுதக்கூடிய அனைவரின் சார்பாகவும், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான உங்கள் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன்." என்றார். அவரது ஏற்பு உரையில், அவர் அமெரிக்கர்களை ஒருங்கிணைக்கும் ஜனாதிபதியாக இருப்பதாக உறுதியளித்தார் மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடுவதாக சபதம் செய்தார். மேலும், குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டிரம்ப்பை விமர்சித்த கமலா ஹாரிஸ், அவர் தங்கள் நாட்டை பின்னுக்கு இழுக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். "இந்த தேர்தல் நமது தேசத்தின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்" என்று கமலா ஹாரிஸ் மேலும் கூறினார்.