நேபாளத்தில், இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்தததில் 11 பேர் கொல்லப்பட்டனர்
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியப் பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 40 பயணிகளுடன் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. "யுபி எஃப்டி 7623 எண் கொண்ட பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது" என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறினார்.
மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மாதவ் பாடேல் தலைமையில் 45 ஆயுதம் தாங்கிய போலீஸ் படை வீரர்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜூலை மாதம், நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த 65 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
Twitter Post
#WATCH | Nepal | An Indian passenger bus with 40 people onboard has plunged into the Marsyangdi river in Tanahun district, confirms Nepal Police. "The bus bearing number plate UP FT 7623 plunged into the river and is lying on the bank of the river," DSP Deepkumar Raya from the... pic.twitter.com/P8XwIA27qJ— ANI (@ANI) August 23, 2024