7.0 ரிக்டர் அளவு; ரஷ்யாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்; எரிமலை வெடிப்பு
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அதிகாலை ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரு பெரிய கடற்படைத் தளத்திற்கு அருகில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளார். நிலநடுக்கம் மேற்பரப்பிலிருந்து 29 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது மற்றும் அதன் மையம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே 102 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. 1,81,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் துறைமுக நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி, எரிமலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தையொட்டி அருகில் உள்ள கடற்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை முதலில் விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே, நிலநடுக்கத்தால் அங்குள்ள ஷிவேலுச் எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.