என்னா அடி! நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு; வைரலாகும் காணொளி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், துருக்கி நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை களேபரமாக மாறியது. வழக்கறிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கேன் அட்டலேயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்ததைச் சுற்றியே இந்த சர்ச்சை எழுந்தது. சிறையில் இருந்தபோதிலும், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அட்டலே சிறையிலிருந்தே பிரச்சாரம் செய்து தனது வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அவருக்கு விலக்கு அளிப்பது குறித்து நடந்த விவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு, இரண்டு எம்பிக்கள் காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.