உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
18 Oct 2024
ஹமாஸ்யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் புதிய தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்
ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், ரஃபாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அறிவித்தது.
18 Oct 2024
அமெரிக்காபன்னுனை படுகொலை செய்ய சதி: முன்னாள் RAW ஊழியருக்கு தொடர்பு என அமெரிக்கா குற்றச்சாட்டு
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ், காலிஸ்தான் ஆதரவாளரான பன்னுன் மீது நடைபெற்ற தோல்வியுற்ற கொலைச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமெரிக்கா முறைப்படி குற்றம் சாட்டியுள்ளது.
18 Oct 2024
ஹமாஸ்ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார்
அக்டோபர் 7, 2023 படுகொலையின் பின்னணியில் இருந்த ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) கொல்லப்பட்டதை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழன் அன்று உறுதிப்படுத்தினார் .
17 Oct 2024
ஐநா சபை1.1 பில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், குறிப்பாக இந்தியாவில்: ஐ.நா
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் Oxford Poverty and Human Development Initiative (OPHI) ஆகியவற்றின் அறிக்கை, உலகம் முழுவதும் 1.1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாடுவதாக வெளிப்படுத்தியுள்ளது.
17 Oct 2024
கனடாநிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ
கனடா நாட்டின் வெளிநாட்டு தலையீடு விசாரணைக்கு முன் சாட்சியமளித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவதற்கு கனடா உளவுத்துறை வழங்கிய உளவு தகவல் மட்டுமே ஆதாரம் என்றும், வேறு வலுவான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
16 Oct 2024
கனடாஇந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவும், நியூசிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.
15 Oct 2024
இந்தியாஇந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா?
இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே ஏற்கனவே விரிச்சலைடைந்த ராஜதந்திர உறவு நேற்று மேலும் பின்னடைவை சந்தித்தது.
15 Oct 2024
கனடாஇந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்?
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இந்திய தூதுவருக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து, திங்களன்று இந்தியா ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றியது மற்றும் கனடாவிலிருந்து அதன் உயர் ஆணையர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.
14 Oct 2024
கனடா'மோசமான குற்றச்சாட்டுகள்': ட்ரூடோவின் செயலுக்கு இந்தியாவின் வலுவான மறுப்பு
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற இராஜதந்திரிகளுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டை 'ஆர்வமுள்ள நபர்கள்' என்று நிராகரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அரசாங்கம் கனடிய இராஜதந்திரியை அழைத்தது தனது கண்டனத்தை பதிவு செய்தது.
14 Oct 2024
ஆப்பிரிக்காஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; காண்க!
உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாராவில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
13 Oct 2024
உலக செய்திகள்அது கொலம்பஸ் தான்; 500 ஆண்டு மர்மத்திற்கு விடை கண்டுபிடித்த ஸ்பெயின் விஞ்ஞானிகள்
இரண்டு தசாப்தகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஸ்பெயினின் செவில்லி கதீட்ரலில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1500களில் இந்தியாவுக்கு கடல்வழியைத் தேடி கிளம்பிய கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு சொந்தமானது என்று தடயவியல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
12 Oct 2024
அமெரிக்காமில்டன் சூறாவளியால் 50 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு; அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தகவல்
மில்டன் சூறாவளி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிபுணர்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
12 Oct 2024
ஏஆர் ரஹ்மான்அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பிரச்சார வீடியோ வெளியீடு
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ஆதரவாக 30 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
12 Oct 2024
உலகம்100 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் குறித்து 2024இல் கிடைத்த குறிப்பு; எவரெஸ்ட் மலையேற்ற மர்மத்தை உடைக்குமா?
எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள மத்திய ரோங்பக் பனிப்பாறையில் புகைப்படக் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜிம்மி சின் மேற்கொண்ட சமீபத்திய கண்டுபிடிப்பு ஒரு நூற்றாண்டு பழமையான மர்மத்தைத் தீர்ப்பதற்கான திறவுகோலாக இருக்கலாம்.
12 Oct 2024
ஆப்பிரிக்கா50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
11 Oct 2024
இஸ்ரேல்ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை
தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நீலக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
11 Oct 2024
நோபல் பரிசுஅணுகுண்டு பரவலுக்கு எதிராக போராடும் ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நோபல் கமிட்டி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்துள்ளது.
11 Oct 2024
நியூசிலாந்துஇந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்; நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேச்சு
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
10 Oct 2024
பிரதமர் மோடி21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (அக்டோபர் 10) அன்று லாவோஸின் வியன்டியானில் நடந்த ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
10 Oct 2024
நோபல் பரிசுதென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான மதிப்புமிக்க நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2024
சூறாவளிபுளோரிடாவைத் தாக்கிய மில்டன் சூறாவளி; 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்தன
மில்டன் என்ற 3 வகை புயல், புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் சியாஸ்டா கீ அருகே புளோரிடாவைத் தாக்கியது.
09 Oct 2024
சூறாவளிஉலகெங்கும் சூறாவளிகள் இருமடங்கு அதிகமாவதன் காரணம் புவி வெப்பமடைதலே: அறிக்கை
மனிதனால் தூண்டப்படும் புவி வெப்பமடைதல் தான், ஹெலன் போன்ற பேரழிவு தரும் சூறாவளிகளின் வாய்ப்புகளை பெரிதும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
08 Oct 2024
நேபாளம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
07 Oct 2024
பிரிட்டன்வேலைக்கு விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில் கடிதம்; பிரிட்டனில் வினோத சம்பவம்
பிரிட்டனில் 70 வயதான பெண் ஒருவர் விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்பை பெற்றுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
07 Oct 2024
விளாடிமிர் புடின்அதிபர் விளாடிமிர் புடின் பிறந்த நாளில் ரஷ்யா அரசு ஊடகத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்
ரஷ்யாவின் முன்னணி அரச ஊடக நிறுவனமான ஆல்-ரஷ்யா ஸ்டேட் டெலிவிஷன் அண்ட் ரேடியோ பிராட்காஸ்டிங் கம்பெனி (விஜிடிஆர்கே) இன்று ஒரு பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
06 Oct 2024
இங்கிலாந்துதிருடச் சென்ற வீட்டில் சமைத்து, துணிதுவைத்து வைத்துச் சென்ற வினோத திருடன்; இங்கிலாந்தில் நடந்த ருசீகர சம்பவம்
இங்கிலாந்தின் மொன்மவுத்ஷிரில் நடந்த ஒரு வினோதமான திருட்டு வழக்கில், 36 வயதான டாமியன் வோஜ்னிலோவிச் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் திருடச் சென்றபோது செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
06 Oct 2024
இஸ்ரேல்இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார்.
05 Oct 2024
அமெரிக்காஅமெரிக்காவில் 530,000 புலம்பெயர்ந்தோருக்கு சட்ட அந்தஸ்து நீடிக்கப்படாது: பைடன் நிர்வாகம்
ஜோ பைடன் நிர்வாகம் தோராயமாக 530,000 புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ நிலையை நீட்டிக்காது என்று அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது.
04 Oct 2024
வைரஸ்11 பேரைக் கொன்ற கொடிய மார்பர்க் வைரஸ்; மேலும் சில தகவல்கள்
எபோலா போன்ற கொடிய நோயான மார்பர்க் வைரஸ் நோய், செப்டம்பர் 27 அன்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் 11 உயிர்களைக் கொன்றது மற்றும் 25 பேரை பாதித்துள்ளது.
04 Oct 2024
ஈரான் இஸ்ரேல் போர்போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை
மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவிலான போரை ஆபத்தில் ஆழ்த்தும் அபாயகரமான தொடர் வளர்ச்சியைத் தூண்டும் நிலையில், இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தியாவின் முயற்சியை நாடியுள்ளார்.
04 Oct 2024
ஈரான் இஸ்ரேல் போர்'எங்கள் எதிரிகளை தோற்கடிப்போம்': இஸ்ரேல் போருக்கு மத்தியில் ஈரானின் தலைவர் கமேனி உரை
மத்திய தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா மசூதியில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வெள்ளிக்கிழமை சொற்பொழிவை நிகழ்த்தினார்.
04 Oct 2024
குரங்கம்மைஅவசரகால பயன்பாட்டிற்கான உலகின் முதல் குரங்கம்மை கண்டறியும் சோதனைக்கு WHO ஒப்புதல்
உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் அவசரகால பயன்பாட்டுப் பட்டியல் (EUL) நடைமுறையின் கீழ் குரங்கு காய்ச்சலுக்கான முதல் சோதனைக் கண்டறிதல் (IVD) சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
04 Oct 2024
மாலத்தீவுஅக்டோபர் 7ஆம் தேதி மாலத்தீவு அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இருதரப்பு பயணமாக அக்டோபர் 7ஆம் தேதி இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஏஎன்ஐ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03 Oct 2024
பிரிட்டன்நீண்டகால சர்ச்சைக்கு முடிவு; சாகோஸ் தீவை மொரிஷியஸிடம் ஒப்படைத்தது பிரிட்டன்
சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு மாற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
03 Oct 2024
ஈரான்ஈரானின் அணுசக்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்களை அழிக்க இஸ்ரேல் திட்டம்: அமெரிக்காவின் பதில் என்ன?
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானின் போர் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் திட்டமிட்டு வருகிறது.
02 Oct 2024
இந்தியா2050ல் இந்தியா உலக வல்லரசாக மாறும்: UKவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர்
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னணி வல்லரசுகளாக மாறும், இது உலகத் தலைவர்கள் செல்ல வேண்டிய "சிக்கலான உலக ஒழுங்கிற்கு" வழிவகுக்கும் என்று கணித்துள்ளார்.
02 Oct 2024
விமானம்மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதட்டம்: விமான சேவைகள் இடைநிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், விமான நிறுவனங்கள் இஸ்ரேல், லெபனான் ஆகிய நாடுகளுக்கு விமான இடைநிறுத்தத்தை நீட்டித்துள்ளன.
02 Oct 2024
இஸ்ரேல்இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது நேற்று ஈரான் 200 ஏவுகணைகளை வீசி தாக்கியது.
02 Oct 2024
இஸ்ரேல்இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; அதிகரிக்கும் போர் பதற்றம்
நேற்று நள்ளிரவு இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். கிட்டத்தட்ட 200 ஏவுகணைகள் வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
01 Oct 2024
பாங்காக்பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
செவ்வாய்க்கிழமை புறநகர் பாங்காக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.