இந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா?
இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே ஏற்கனவே விரிச்சலைடைந்த ராஜதந்திர உறவு நேற்று மேலும் பின்னடைவை சந்தித்தது. இது விசா விண்ணப்பதாரர்களிடையே நிச்சயமற்ற தன்மைக்கும், குழப்பத்திற்கும் வழிவகுத்தது. இந்தியாவின் இராஜதந்திரிகளுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மத்திய அரசு,"மேலும் நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது" என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) கூறியுள்ளது. விசா செயல்முறைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன, மாணவர்களைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் பொறுத்து இந்த ராஜதந்திர மோதல் தீர்மானிக்கப்படும்.
நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்தேறிய ராஜதந்திர விவகாரங்கள்
ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றி, அதன் உயர் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக நேற்று இரவு அறிவித்தது. இந்த ஆட்குறைப்பு இரு நாட்டின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை தெளிவாக காட்டுகிறது. கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் கூறப்பட்ட குற்றசாட்டுகள் காரணமாக ஏற்பட்ட விரிசல், நிச்சயம் அனுமதிக்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
தூதரகங்கள் எண்ணிக்கையை குறைத்த கனடா
கனடா ஏற்கனவே தனது தூதரகங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் திரும்பப் பெற்றுள்ளது மற்றும் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய முகவர்கள் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து உறவுகள் தளர்ந்த பின்னர், கடந்த செப்டம்பரில் இருந்து அதன் பணிகளில் உள்ள உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று கூறிய இந்தியா, பின்னர் கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதை சுமார் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்தது. எனவே, எந்த கனேடிய குடிமகனும் இந்திய விசாவிற்கு மூன்றாம் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியாது.
பாதிக்கப்பட்ட விசா சேவைகள்
இந்த விசாக்களில் பெரும்பாலானவை இந்திய வம்சாவளியினர் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க இந்தியாவுக்கு வருவதால், இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தவர்களுக்கு கணிசமான கஷ்டங்களை ஏற்படுத்தியது. இருப்பினும், செல்லுபடியாகும் வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை அல்லது இந்தியாவிற்கான செல்லுபடியாகும் நீண்ட கால விசாவைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி கனேடியர்கள் பாதிக்கப்படவில்லை. நவம்பர் 2023 இல் இந்தியா படிப்படியாக விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது, வணிக மற்றும் மருத்துவ விசாக்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
நிறுத்தப்பட்ட விமான சேவை
பெங்களூரு, சண்டிகர் மற்றும் மும்பையில் விசா மற்றும் தனிநபர் தூதரக சேவைகளை கனடா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதுமட்டுமின்றி கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவும் கனடாவும் இன்னும் நேரடி விமான இணைப்பை மீண்டும் தொடங்கவில்லை.
மாணவர் விசாவில் கை வைத்த கனடா
நிரந்தரக் குடியுரிமை, பணி அனுமதி மற்றும் படிப்பு விசாக்களுக்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் நிலையில், இந்தியக் குடியேறியவர்களுக்கான முதன்மையான இடங்களில் ஒன்றாக கனடா உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடா சர்வதேச மாணவர் விசாக்களின் எண்ணிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு 360,000 ஆகக் குறைத்தது, 2022ல் இருந்து அதை 35% குறைத்தது. நாட்டின் சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் 41% இந்திய மாணவர்கள் இருப்பதால் இந்த நடவடிக்கை இந்தியாவை மிகவும் பாதித்தது