NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் புதிய தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் புதிய தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்
    ஹமாஸின் புதிய தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்

    யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் புதிய தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 18, 2024
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், ரஃபாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அறிவித்தது.

    ஹமாஸ் படைகளுடனான மோதலின் போது பீரங்கி ஷெல் தாக்குதல் மூலம் சின்வார் கொல்லப்பட்ட நிலையில், அவரது மரணம் ஹமாஸ் அமைப்பிற்குள் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தனது முன்னோடி இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த ஜூலை மாதம் ஹமாஸின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சின்வார், இஸ்ரேலுக்கு எதிரான தொடர்ச்சியான சண்டையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

    அவர் கடந்த ஆண்டின் அக்டோபர் 7 தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தார். இதன் விளைவாக 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்தனர்.

    அடுத்த தலைவர்

    ஹமாஸின் அடுத்த தலைவருக்கான போட்டி

    சின்வாருக்குப் பின் வரும் அடுத்த தலைவருக்கான முக்கியப் போட்டியாளர்களில் ஹமாஸின் ராணுவப் பிரிவில் மூத்த தளபதியான முகமது சின்வார் உள்ளார்.

    முகமதுவின் நியமனம் யாஹ்யாவின் கடுமையான அணுகுமுறையின் தொடர்ச்சியைக் குறிக்கலாம்.

    மற்றொரு சாத்தியமான வாரிசான கலீல் அல்-ஹய்யா, போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, ஹமாஸை இராஜதந்திரத்திற்கு மாற்றக்கூடும்.

    கத்தாரை தளமாகக் கொண்ட கலீத் மெஷால், அவரது சர்வதேச தொடர்புகளுடன் ஹமாஸின் எதிர்கால உத்திகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    மற்ற முக்கிய நபர்களில் ரஃபாவில் ஹமாஸின் ராணுவ நடவடிக்கைகளின் தலைவரான முகமது ஷபானா மற்றும் மார்ச் 2023இல் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மர்வான் இசா ஆகியோர் அடங்குவர்.

    பல உயர்மட்ட இராணுவத் தலைவர்களின் மரணம் ஹமாஸை அதன் தலைமை அமைப்பில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஹமாஸ்

    ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம் இஸ்ரேல்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல்
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா  அமெரிக்கா
    காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah'' காசா
    "All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு எதிராக இஸ்ரேலின் "Where were your eyes on..." இஸ்ரேல்

    உலகம்

    ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி ஜப்பான்
    அமெரிக்காவில் இந்து கோவில் சேதம்; 'இந்துக்களே திரும்பிச் செல்லுங்கள்' என்ற வாசகத்தால் பரபரப்பு அமெரிக்கா
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் மற்றும் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ் வலியுறுத்தல் ஐநா சபை
    ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல் இஸ்ரேல்

    உலக செய்திகள்

    உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024: 9 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியது இந்தியா இந்தியா
    சரியாக ஒருவருட இடைவெளி; ஒரே நாளில் மரணமடைந்த ஹாரி பாட்டர் பட நடிகர்கள் ஹாலிவுட்
    இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நிராகரிப்பு மாலத்தீவு
    இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா டாடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025