NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
    இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

    21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 10, 2024
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (அக்டோபர் 10) அன்று லாவோஸின் வியன்டியானில் நடந்த ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.

    அங்கு இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கை இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு ஆற்றலையும் வேகத்தையும் அளித்துள்ளது என்று வலியுறுத்தினார்.

    உலகளாவிய மோதல்களை எதிர்கொள்வதில் இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு இன்று மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

    "இந்தியாவின் ஆக்ட்-ஈஸ்ட் கொள்கையை நான் அறிவித்திருந்தேன். கடந்த பத்தாண்டுகளில், இந்தக் கொள்கை இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்று உறவுகளுக்கு புதிய ஆற்றலையும், திசையையும், வேகத்தையும் அளித்துள்ளது.

    ஆசியானுக்கு முக்கியத்துவம் அளித்து, 1991ல் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியைத் தொடங்கினோம்." என 21வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் மோடி வியாழக்கிழமை கூறினார்.

    ஒத்துழைப்பு

    ஆசியான் நாடுகளுடனான ஒத்துழைப்பை பட்டியலிட்ட பிரதமர் மோடி

    ஆசியான் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா மேற்கொண்ட பிற முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார்.

    "கடந்த ஆண்டு பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான கடல்சார் பயிற்சிகள் தொடங்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில், ஆசியான் பிராந்தியத்துடனான நமது வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து 130 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

    இன்று, இந்தியா 7 ஆசியான் நாடுகளுடன் நேரடி விமான இணைப்பைக் கொண்டுள்ளது. விரைவில் நேரடி விமானங்கள் புருனேயிலும் தொடங்கப்படும்." என்று அவர் கூறினார்.

    "நாங்கள் திமோர் லெஸ்டேவில் புதிய தூதரகங்களைத் திறந்துள்ளோம். ஆசியான் பிராந்தியத்தில் நாங்கள் ஃபின்டெக் இணைப்பை ஏற்படுத்திய முதல் நாடு சிங்கப்பூர். இப்போது இது மற்ற நாடுகளிலும் பிரதிபலிக்கிறது." என்று அவர் மேலும் கூறினார்.

    மனித மைய அணுகுமுறை

    இந்தியா-ஆசியான் உறவில் மனித மைய அணுகுமுறை

    நாலந்தா பல்கலைக்கழகத்தில் 300 ஆசியான் மாணவர்கள் உதவித்தொகை மூலம் எவ்வாறு பயனடைந்துள்ளனர் என்பதை எடுத்துரைத்த பிரதமர் மோடி, ஆசியானுடனான வளர்ச்சி கூட்டுறவில் இந்தியாவின் மனித மைய அணுகுமுறையை முன்வைத்தார்.

    "லாவோ, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இந்தோனேசியாவில் பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அது கொரோனா தொற்றுநோயாக இருந்தாலும் அல்லது இயற்கை பேரழிவாக இருந்தாலும், நாம் ஒருவருக்கொருவர் உதவியுள்ளோம்." என்று அவர் மேலும் கூறினார்.

    இந்தியா-ஆசியான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, பசுமை நிதி மற்றும் டிஜிட்டல் நிதி ஆகியவற்றிற்கு பல துறைகளில் ஒத்துழைப்பதற்காக இந்தியா 30 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

    21ஆம் நூற்றாண்டு

    21ஆம் நூற்றாண்டு இந்தியா-ஆசியானுக்கானது: பிரதமர் மோடி

    இந்தியாவும் ஆசியானும் அண்டை நாடுகள், உலகளாவிய தெற்கில் பங்குதாரர்கள் மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியம் என்று பிரதமர் கூறினார்.

    பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "நாம் அமைதியை விரும்பும் நாடுகள், ஒருவருக்கொருவர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கிறோம்.

    நமது இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நாம் உறுதிபூண்டுள்ளோம். 21ஆம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நூற்றாண்டு என்று நான் நம்புகிறேன்.

    இன்று, உலகின் பல பகுதிகளில் மோதல்கள் மற்றும் பதற்றம் ஆகிய நிலைமை இருக்கும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை." என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா
    ஆசியா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பிரதமர் மோடி

    'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன்  நரேந்திர மோடி
    3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர்
    தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத்; 3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி வந்தே பாரத்
    ஒருநாளைக்கு 60 லட்சம் சிப்கள்; குஜராத்தில் அமையும் மெகா செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா

    இந்தியா

    பெங்களூர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்? வைரலாகும் வீடியோவின் பின்னணி வைரல் செய்தி
    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை ரிசர்வ் வங்கி
    விவசாயிகளுக்கு ரூ.2000; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி விவசாயிகள்

    ஆசியா

    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே நெஸ்லே
    தென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம் சூறாவளி
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி நரேந்திர மோடி

    உலக செய்திகள்

    லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    கூடுதல் நேரம் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா! அதிர்ச்சித் தகவல் இந்தியா
    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம் அமெரிக்கா
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல் குவாட் குழு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025