"இதுதான் காதல் என்பதா?!": ரொமான்டிகாக காதலை வெளிப்படுத்திய மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க்
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது காதல் மனைவி பிரிசில்லா சானின் மாபெரும் சிற்பத்தை அவர்களது வீட்டின் பின்புறத்தில் நிறுவியுள்ளார். 40 வயதான மார்க், ஆகஸ்ட் 13 அன்று இன்ஸ்டாகிராமில் "உங்கள் மனைவியின் சிற்பங்களை உருவாக்கும் ரோமானிய மரபுகளை" மீண்டும் கொண்டு வரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை தற்போது வைரலாகி வருகிறது. இந்த சிற்பம் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் டேனியல் அர்ஷம் என்பவரால் உருவாக்கப்பட்டது. மேலும் அவரது கையொப்ப பாணியை பிரதிபலிக்கிறது, கட்டிடக்கலை, சிற்பம் மற்றும் செயல்திறன் கலை ஆகியவற்றின் கூறுகளை கலக்கிறது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
Twitter Post
காதல் சிலை பற்றி மேலும் சில தகவல்கள்
இந்தச் சிலை அர்ஷமின் சமீபத்திய வெண்கலப் படைப்புகள் மற்றும் டிஃப்பனி பச்சை நிற பாட்டினுடன் மிகவும் ஒத்திருக்கிறது. "மனைவியின் சிற்பங்களை உருவாக்கும் உங்கள் ரோமானிய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருகிறேன். நன்றி @danilarsham" என்று மார்க் பதிவிட்டுள்ளார். ஜுக்கர்பெர்க்கின் இடுகைக்கு பதிலளித்த மனைவி பிரிஸ்கில்லா: "என்னை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு சிறந்தது" என்று வேடிக்கையாக பதிலளித்துள்ளார். திருமணமாகி 12 ஆண்டுகளுக்கும் மேலாகியும் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிஸ்கில்லா சான் இருவரும் இவ்வளவு காதலுடன் இருப்பதை பார்த்து, சமூக ஊடக பயனர்கள் சிலாகிக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு ஹார்வர்டில் மார்க் ஜுக்கர்பெர்க் இருந்த காலத்தில் கல்லூரி விருந்தில் சந்தித்தபோது தம்பதியரின் உறவு தொடங்கியது.