Mpox பரவல்: 2 ஆண்டுகளில் 2வது முறையாக உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது. நெருங்கிய தொடர்பு மூலம் Mpox பரவலாம். பொதுவாக லேசான, அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானது இந்த Mpox என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும், உடலில் சீழ் நிறைந்த புண்களையும் ஏற்படுத்துகிறது. காங்கோவில் துவங்கிய இந்த பரவல், தற்போது மாறுபட்டு, கிளேட்-ஐபி, பாலியல் தொடர்பு உட்பட வழக்கமான நெருங்கிய தொடர்பு மூலம் மிகவும் எளிதாக பரவுகிறது. இது காங்கோவிலிருந்து புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பரவியுள்ளதால், WHO இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் பரவல்
இந்த வார தொடக்கத்தில், ஆப்பிரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார அமைப்பு, வைரஸ் தொற்று ஆபத்தான விகிதத்தில் பரவுகிறது என்று எச்சரித்த பின்னர் ஆப்பிரிக்கா கண்டத்திற்கு mpox அவசரநிலையை அறிவித்தது WHO. இந்த ஆண்டில் இதுவரை ஆப்பிரிக்க கண்டத்தில் 17,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான mpox வழக்குகள் மற்றும் 517 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது வழக்குகள் 160% அதிகரித்துள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்கள் தெரிவித்தன. மொத்தம் 13 நாடுகளில் Mpox வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கோ மற்றும் அதன் அண்டை நாடுகளில் பரவிவரும் mpox நோய், ஆப்பிரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார அமைப்பை முதன்முறையாக "கண்டம் சார்ந்த பொது சுகாதார அவசரநிலையை" அறிவிக்க தூண்டியுள்ளது.