Loading...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

02 Nov 2026
• உக்ரைன்

அக்டோபரில் ரஷ்யாவிற்கு பேரதிர்ச்சி அளித்த உக்ரைனின் 'ஆபரேஷன் விவால்டி'

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 54,000-க்கும் அதிகமான வீரர்களை பலிகொடுத்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் அரசில் ராணுவத்தின் ஆதிக்கம்: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒப்புதல்

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திர உறவுகள் மற்றும் அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அந்நாட்டு ராணுவத்திற்கு இருக்கும் தீவிர பங்களிப்பை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நெதன்யாகு அழுத்தத்தால் ஈரான் மீது டிரம்ப் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமா? டாக்கர் கார்ல்சன் அதிர்ச்சி குற்றச்சாட்டு

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக் கூடும் என அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

02 Nov 2026
• அமெரிக்கா

அமெரிக்கவின் புளோரிடாவில் லியர்ஜெட் விமான விபத்து: பயணித்த 9 பேரும் மரணம், வெளியானது காக்பிட் உரையாடல்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 9 பேரின் உயிரைப் பறித்த லியர்ஜெட் சொகுசு விமான விபத்தின் பதறவைக்கும் கடைசி நிமிட ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் (ATC) குரல் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

02 Nov 2026
• இஸ்ரேல்

இஸ்ரேல் தேர்தலில் தொங்கு பாராளுமன்றம்: காடி ஐசென்காட் உடன் கூட்டணி அமைக்க நெதன்யாகு திட்டம்?

அண்மையில் நடைபெற்ற இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு யாஷார் கட்சியின் தலைவர் காடி ஐசென்காட் உடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

01 Nov 2026
• உலகம்

பின்லாந்தில் காதல் தேட இலவச சுற்றுலா: உலக சிங்கிள்ஸுக்கு 'விசிட் பின்லாந்து' அழைப்பு

உலகின் மிக மகிழ்ச்சியான நாடாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் பின்லாந்து, உலகெங்கிலும் உள்ள சிங்கிள்ஸ்களை தனது நாட்டின் கலாச்சாரம், உணவு முறைகளை அனுபவிக்கவும், அங்கே தங்களது காதலை கண்டறியவும் ஓர் அற்புதமான, அனைத்துச் செலவுகளும் இலவசமான சுற்றுலாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

01 Nov 2026
• அமெரிக்கா

அமெரிக்க இடைத்தேர்தல்: 4.3 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு, டெமாக்ரட்டுகளுக்கு முன்னிலை

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 4 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் முன்கூட்டியே தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

01 Nov 2026
• நேபாளம்

நேபாளத்தில் 6 இந்திய மலையேற்ற பயணிகள் மாயம்: கடும் பனியில் ராணுவம் தீவிர தேடுதல்

நேபாள நாட்டின் மிக உயரமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஷே-போக்ஸுண்டோ ஏரிக்கு பனிபடர்ந்த மலைப்பாதைகள் வழியாக மலையேற்றம் சென்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு இந்தியச் சுற்றுலாப் பயணிகள், திடீரென கொட்டித் தீர்த்த கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலில் சிக்கி மாயமாகியுள்ளனர்.

01 Nov 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து: டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், குடிவரவு சட்டங்களை கடுமையாக்கும் முயற்சியின் பகுதியாக இதுவரை 3,00,000-க்கும் அதிகமான விசாக்களை ரத்து செய்துள்ளது.

பைனான்ஸ் கிரிப்டோ ஹேக்கிங் பின்னணியில் வடகொரியா: அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது FBI

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான பைனான்ஸில் இருந்து சுமார் $6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 53,000 கோடி) கிரிப்டோ சொத்துக்கள் சுருட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வடகொரிய நாட்டின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதிப்படுத்தியுள்ளது.

01 Nov 2026
• ஜெர்மனி

ஜெர்மனியில் 'ஜென் Z' இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை: ஃபிராங்க்ஃபெர்ட்டில் கடைகள் சூறையாடல்

ஜெர்மனியில் ராணுவ கட்டாயப் பயிற்சி, கல்வி நிதி வெட்டுக்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக Gen Z regelt என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம், ஃபிராங்க்ஃபெர்ட் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறையாக மாறியது.

31 Oct 2026
• பிரிட்டன்

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து அகதிகள் செல்ல பிரிட்டன் புதிய திட்டம்: 2027 முதல் அமல்

ஆங்கிலக் கால்வாய் வழியாகச் சிறிய படகுகளில் ஆபத்தான முறையில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்வதைத் தடுக்கும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் தங்கியுள்ள அகதிகளுக்காகப் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சட்டப்பூர்வ மறுவாழ்வுத் திட்டத்தை பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா தாக்குதலுக்கு எல்லை தாண்டி பதிலடி கொடுக்க ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து வரக்கூடிய எந்தவொரு புதிய அச்சுறுத்தலுக்கும் எவ்வித புவியியல் எல்லை கட்டுப்பாடுகளும் இன்றி உடனடியாகவும் துல்லியமாகவும் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அந்நாட்டு ஆயுதப் படைகளுக்குத் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் பேரன் நிலம் மீட்பு: 30 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

தேசப்பிதா மகாத்மா காந்தியின் மறைந்த பேரனான கனு காந்திக்குச் சொந்தமான அறக்கட்டளையின் 30 ஏக்கர் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்த அமெரிக்க நபரை, உடனடியாக அங்கிருந்து வெளியேறி நிலத்தை ஒப்படைக்குமாறு அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா அமைதி வரைவு திட்டம்: ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் உரேனியம் மாற்றம் பரிந்துரை

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான போர்ப்பதற்றத்தைத் தணிக்கும் வகையில் புதிய வரைவுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் தியேட்டரில் 1207 படங்கள்: அமெரிக்க இளைஞர் கிளென்வுட் ஹோஸ்கின் கின்னஸ் சாதனை

ஒரே வருடத்தில் திரையரங்கிற்கு நேரில் சென்று அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைப் பார்த்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனை (Guinness World Records) படைத்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த முதல் போப்: வரலாறு படைத்தார் பத்தாம் லியோ போப்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பத்தாம் லியோ போப், வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தபால் வாக்கு மூலம் தனது வாக்கைப் பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

30 Oct 2026
• ரஷ்யா

4 மாதங்களாக தீராத தலைவலி; கண்ணுக்குள் முளைத்து வேர்விட்ட விதை; ரஷ்யாவில் அதிர்ச்சி

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரின் கண்ணுக்குள், முளைவிட்ட விதை ஒன்று கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ள அபூர்வ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உழைப்பிற்கேற்ற ஊதியம்: சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியருக்கு ₹4 கோடி லம்போர்கினி கார் பரிசளித்த நிறுவனம்

துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரிச்கி பிராப்பர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது மூன்றாவது ஆண்டு விழா விருதுகள் இரவில் சிறந்த பெண் ஊழியருக்கு லம்போர்கினி உருஸ் சொகுசு காரைப் பரிசளித்துள்ளது.

30 Oct 2026
• வாடிகன்

வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க இடைத்தேர்தலில் தபால் வாக்கு கோரிய போப் ஆண்டவர்

வாடிகன் நகரத்தில் வசித்து வரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடமான போப் ஆண்டவர் பதினான்காம் லியோ, அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக தபால் வாக்கு கோரி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

30 Oct 2026
• இஸ்ரேல்

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கூட்டணிக்கு பின்னடைவு, ஆட்சியமைப்பதில் சிக்கல்

இஸ்ரேலில் அக்டோபர் 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் அனைத்து வாக்குக் எண்ணிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது.

30 Oct 2026
• பூட்டான்

பூடானில் பனிப்பாறை ஏரி உடைப்பு: மேற்கு வங்காளம் மற்றும் அசாமுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூடான் நாட்டின் காசா மாவட்டத்தில் உள்ள சின்தாபு பனிப்பாறை ஏரியில் வியாழக்கிழமை மாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு பிரம்மாண்ட வெள்ளப்பெருக்கு (GLOF) உருவாகியுள்ளது.

பாகிஸ்தானில் கொடூரம்: டிக்டாக் பயன்படுத்தியதாக இரு சகோதரிகளை சுட்டுக் கொன்ற சகோதரன்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ட்ரிக் ரோடு பகுதியில் அமைந்த நியூ ரஹ்மானாபாத் இல்லத்தில், சமூக வலைதளமான டிக்டாக் பயன்படுத்திய விவகாரத்தில் இரு சொந்த சகோதரிகள் அவர்களின் அண்ணனாலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 Oct 2026
• விமானம்

'ஆர்டர் ஆஃப் சயீத் 2' விருது வென்ற கேப்டன் ஸ்மித் மச்சார்: இவருக்கு முன் இவ்விருதைப் பெற்ற இரு இந்தியர்கள் யார்?

ஃபிளைதுபாய் விமானத்தில் ஓமனி இணை பைலட் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலையும் மீறி, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய குடிமகன் விருதான 'ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆஃப் சயீத் II' வழங்கப்பட்டுள்ளது.

29 Oct 2026
• ஸ்பெயின்

ஸ்பெயின் ரயில் விபத்தில் 69 பேர் பலியானதன் எதிரொலியாக வெடித்த போராட்டம்: அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி

ஸ்பெயினில் மாட்ரிட்டில் இருந்து செவீயா நோக்கிச் சென்ற அதிவேக ரயில் நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதிய கோர விபத்தில் குறைந்தது 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலரும் படுகாயமடைந்தனர்.

29 Oct 2026
• இஸ்ரேல்

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை பலமின்றி இழுபறி, அரபு கட்சிகள் கையில் ஆட்சி அமைக்கும் அதிகாரம்?

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பமும், இழுபறியும் ஏற்பட்டுள்ளது.

29 Oct 2026
• போர்

மத்திய கிழக்கு மோதலில் 14 மாலுமிகள் உள்பட 22 இந்தியர்கள் பலி: வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை

மத்திய கிழக்கில் நிலவி வரும் தொடர் போர் மற்றும் பதற்ற சூழலில், 14 மாலுமிகள் உட்பட மொத்தம் 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

29 Oct 2026
• அமெரிக்கா

ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தாக்குதல் எச்சரிக்கை, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு ரகசியக் கடிதம் எழுதிய ஜே.டி.வேன்ஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய ராணுவத் தாக்குதலை நடத்த பரிசீலித்து வரும் வேளையில், முடங்கியுள்ள தூதரகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாய் என்பவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

29 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்? டொனால்ட் ட்ரம்ப் திட்டம் குறித்து CNN செய்தி

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தல் நிறைவடைந்ததும் ஈரான் மீது மீண்டும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு அமெரிக்க ராணுவம் தயாராகி வருவதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

28 Oct 2026
• தீபாவளி

பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்: டவுனிங் ஸ்ட்ரீட்டில் விளக்கேற்றிய ஆண்டி பர்ன்ஹாம்

பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அந்நாட்டுப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான '10 டவுனிங் ஸ்ட்ரீட்'டில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

28 Oct 2026
• துபாய்

அடுத்த 2 மாதங்களில் துபாயில் 24 காரட் தங்கத்தில் நடைபாதை திறக்கப்படவுள்ளது

சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாவின் மையப்புள்ளியாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில், உலகின் மிக நீளமான 24 காரட் தூய தங்கத்திலான பிரம்மாண்ட நடைபாதை விரைவில் திறக்கப்படவுள்ளது.

28 Oct 2026
• ஸ்பெயின்

ஸ்பெயினில் கோர ரயில் விபத்து: இரு அதிவேக ரயில்கள் மோதி 46 பேர் பரிதாப பலி, பலர் கவலைக்கிடம்

ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் புதன்கிழமை காலை இரு அதிவேகப் பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 46 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

28 Oct 2026
• இஸ்ரேல்

'என் ஆதரவால்தான் நெதன்யாகு ஜெயிச்சிருக்காரு': இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் தற்பெருமை

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி கணிசமான இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிப்பதற்கு தனது ஆதரவே முக்கியக் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரிமை கோரியுள்ளார்.

28 Oct 2026
• விமானம்

விமான விபத்தைத் தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் ஃபிளைதுபாய் குழுவுக்கு அபுதாபி அதிபரின் உயரிய விருது

விமானத்தில் நிகழ்ந்த அவசர நிலையின் போது, படுகாயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டு பேரழிவைத் தடுத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் ஃபிளைதுபாய் விமானப் பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

28 Oct 2026
• இஸ்ரேல்

இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை; எக்சிட் போல் முடிவுகளால் நெதன்யாகுவுக்கு பின்னடைவா?

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வெளியான கருத்துக் கணிப்புக்கு பிந்தைய முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்பதைக் காட்டுகின்றன.

28 Oct 2026
• பிரேசில்

தேர்தல் தோல்விக்குப் பின் பிரேசிலில் இருந்து ஃபிளேவியோ போல்சனாரோ தப்பியோட்டம்?விசா வழங்கும் அமெரிக்கா

பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளரும் செனட்டருமான ஃபிளேவியோ போல்சனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்க அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

ரியாத்தில் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் வீரியமிக்கத் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக உரிமை கோரியுள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா $1 பில்லியன் நிதியுதவி சலுகை: ஈரானில் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தினால், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு $1 பில்லியன் (சுமார் ₹8,300 கோடி) நிதியுதவித் தொகுப்பு வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

27 Oct 2026
• இஸ்ரேல்

இஸ்ரேல் தேர்தல் களம்: டிரம்ப் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக மீண்டும் போர் அச்சுறுத்தல் விடுத்த நெதன்யாஹு

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமக்கு அளித்த பகிரங்க ஆதரவைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தீவிரப்படுத்தப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.

தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத் தலம் புக்கெட்டில் பயங்கர வெள்ளம்; புதன்கிழமை வரை தொடரும் கனமழை

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான புக்கெட் தீவில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.