Loading...
மத்திய கிழக்கு மோதலில் 14 மாலுமிகள் உள்பட 22 இந்தியர்கள் பலி: வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை
மத்திய கிழக்கு மோதலில் 14 மாலுமிகள் உள்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

மத்திய கிழக்கு மோதலில் 14 மாலுமிகள் உள்பட 22 இந்தியர்கள் பலி: வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2026
10:20 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் தொடர் போர் மற்றும் பதற்ற சூழலில், 14 மாலுமிகள் உட்பட மொத்தம் 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால் இதுவரை 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வளைகுடா பிராந்தியத்தில் வசிக்கும் நமது இந்தியச் சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நாம் தொடர்ந்து தீவிரத் தொடர்பில் இருக்கிறோம். குறிப்பாக சவுதி அரேபியாவில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

கடல்வழிப் பாதுகாப்பு

ஹூதிகளின் தாக்குதலும் கடல்வழிப் பாதுகாப்பும்

ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி போராளிகள், சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் மீது நடத்திய தாக்குதல்கள் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளன.

ஹூதிகளின் தொடர் தாக்குதல்கள் செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான 'பாப்-எல்-மந்தேப்' நீரிணையின் பாதுகாப்பை பெரிதும் அச்சுறுத்தியுள்ளன.

வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழியிலேயே இச்சச்சரைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT