Loading...
வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க இடைத்தேர்தலில் தபால் வாக்கு கோரிய போப் ஆண்டவர்
அமெரிக்க இடைத்தேர்தலில் தபால் வாக்கு கோரி போப் ஆண்டவர் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்

வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க இடைத்தேர்தலில் தபால் வாக்கு கோரிய போப் ஆண்டவர்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
01:56 pm

செய்தி முன்னோட்டம்

வாடிகன் நகரத்தில் வசித்து வரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடமான போப் ஆண்டவர் பதினான்காம் லியோ, அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக தபால் வாக்கு கோரி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் போப் பதவியில் இருக்கும் போதே தேர்தலில் வாக்களிக்கும் முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். சிகாகோவில் பிறந்த 71 வயதான போப் ஆண்டவர் பதினான்காம் லியோ, அக்டோபர் 3 அன்று தனது சொந்த மாகாணமான இல்லினாய்ஸின் வில் கவுண்டி தேர்தல் அலுவலகத்திடம் தபால் வாக்குச்சீட்டைக் கோரியுள்ளார். போப் ஆண்டவராக பொறுப்பேற்ற பிறகும் அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கவில்லை என்பதால், அமெரிக்கச் சட்டப்படி அவருக்கு வாக்களிக்கும் உரிமை நீடிக்கிறது.

தேர்தல் பங்களிப்பு

போப் ஆண்டவரின் முந்தைய தேர்தல் பங்களிப்பு

போப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் (போப் ஆண்டவரின் இயற்பெயர்) அமெரிக்க அரசியலில் தீவிரமாக வாக்களித்து வந்துள்ளார்.

இவர் 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களிலும், 2012 முதல் 2016 வரை குடியரசுத் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.

மேலும் 2012, 2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களிலும் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போப் ஆண்டவருக்கு, கடந்த அக்டோபர் 13 அன்று வலது நுரையீரலின் கீழ் பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு வரும் சூழலில் அவர் தேர்தலில் வாக்களிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT