Loading...
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா $1 பில்லியன் நிதியுதவி சலுகை: ஈரானில் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா $1 பில்லியன் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா $1 பில்லியன் நிதியுதவி சலுகை: ஈரானில் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
04:44 pm

செய்தி முன்னோட்டம்

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தினால், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு $1 பில்லியன் (சுமார் ₹8,300 கோடி) நிதியுதவித் தொகுப்பு வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இந்த ரகசியப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கும், போரினால் சேதமடைந்த சிவில் உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி

சவுதியின் நிதிச் சலுகையும் நிபந்தனைகளும்

இதற்குப் பதிலாக, சவுதி அரேபியாவின் எண்ணெய் தளங்கள், ராணுவ மையங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முற்றிலும் நிறுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக சவுதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் டெஹ்ரானுக்கு பயணம் மேற்கொண்டு ஈரான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனினும், நிதி கைமாறியதை சவுதி அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

ராஜதந்திர நகர்வுகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் ராஜதந்திர நகர்வுகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் ராணுவத் தலையீட்டைத் தடுக்கும் நோக்கோடு, ஈரான் தன்னை ஒரு முக்கிய ராஜதந்திர மத்தியஸ்தராக நிலைநிறுத்த முயற்சித்துப் வருகிறது.

ஹவுதிகளின் தாக்குதலால் சவுதியின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிதி ஒப்பந்தம் பிராந்தியத்தில் தற்காலிக அமைதியைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த நிதியுதவி ஒப்பந்தத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

ADVERTISEMENT