ஸ்பெயினில் கோர ரயில் விபத்து: இரு அதிவேக ரயில்கள் மோதி 46 பேர் பரிதாப பலி, பலர் கவலைக்கிடம்
செய்தி முன்னோட்டம்
ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் புதன்கிழமை காலை இரு அதிவேகப் பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 46 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாட்ரிட் நகரிலிருந்து தெற்கு ஆண்டலூசியா பிராந்தியத்தை நோக்கிச் சென்ற ரென்ஃபே நிறுவனத்தின் ரயில் மற்றும் இரியோ நிறுவனத்தின் பயணிகள் ரயில் ஆகிய இரண்டும் டோலிடோ நகருக்கு அருகே இடையே மோதிக்கொண்டன. காலை 9:00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரியோ ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு சுக்குநூறாக நொறுங்கின. இக்கோர விபத்தைத் தொடர்ந்து மாட்ரிட் மற்றும் ஆண்டலூசியா பிராந்தியங்களை இணைக்கும் பிரதான பாதையிலான அனைத்து ரயில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணி
மீட்புப் பணிகளும் அவசர நடவடிக்கைகளும்
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காஸ்டிலா-லா மாஞ்சா பிராந்திய அவசரக்கால மீட்புக் குழுவினர், மருத்துவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கவும், அவர்களை தற்காலிகமாக தங்க வைக்கவும் அருகிலுள்ள விளையாட்டு அரங்கம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உர்தா நகர மேயர் மானுவல் கலான்னு தெரிவித்தார்.
விபத்துக்கான துல்லியமான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.