இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கூட்டணிக்கு பின்னடைவு, ஆட்சியமைப்பதில் சிக்கல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலில் அக்டோபர் 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் அனைத்து வாக்குக் எண்ணிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. மொத்தம் உள்ள 120 இடங்களைக் கொண்ட நெசெட் நாடாளுமன்றத்தில், ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற சூழலில், நெதன்யாகு கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காடி ஐசென்காட் தலைமையிலான யாஷர் கட்சி 21 இடங்களை பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. அரபு சமூகக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
முறைகேடு குற்றச்சாட்டு
தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளும் விசாரணையும்
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அரபு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சட்டவிரோத வாக்காளர் அணிதிரட்டல் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவி மூலம் அரபு வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கப்பட்டதா என்பது குறித்து இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமையான ஷின் பெட் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
எந்தவொரு கூட்டணிக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் கிடைக்காததால், இஸ்ரேலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது.
நெதன்யாகு அல்லது எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க அரபு சமூகக் கட்சிகளின் ஆதரவு அத்தியாவசியமாக மாறியுள்ளது.
வரும் நாட்களில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராவிட்டால், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்க நேரிடும்.