Loading...
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை பலமின்றி இழுபறி, அரபு கட்சிகள் கையில் ஆட்சி அமைக்கும் அதிகாரம்?
அரபு கட்சிகளின் தலைவர் யூசப் ஜபரீன்

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை பலமின்றி இழுபறி, அரபு கட்சிகள் கையில் ஆட்சி அமைக்கும் அதிகாரம்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2026
10:42 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பமும், இழுபறியும் ஏற்பட்டுள்ளது. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி எந்தக் கூட்டணியும் அட்சியைப் பிடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

தேர்தல்

தேர்தல் முடிவுகளும் அரபு கட்சிகளின் முக்கியத்துவமும்

இஸ்ரேலின் பாலஸ்தீன வம்சாவழி அரபு வாக்காளர்கள் இம்முறை வரலாறு காணாத அளவில் 80% வாக்குப்பதிவைப் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் கூட்டுப் பட்டியல் மற்றும் ராம் ஆகிய இரு அரபு கட்சிகள் இணைந்து மொத்தம் 19 இடங்களை வென்றுள்ளன.

நெதன்யாகு மற்றும் ஐசென்கோட் ஆகிய இரு பெரும் கட்சிகளுமே தனித்து பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எட்டாததால், ஆட்சியை நிர்ணயிக்கும் 'கிங்மேக்கர்' பங்கை அரபு கட்சிகள் கையில் கொண்டுள்ளன.

சவால்

இரு தரப்பு தயக்கமும் சவால்களும்

முன்னதாக 2021-ஆம் ஆண்டில் நப்தலி பென்னட் மற்றும் யாயிர் லாபிட் தலைமையிலான அரசுக்கு அரபு கட்சியான ராம் ஆதரவளித்து சாதனை படைத்தது.

ஆனால், தற்போதைய தேர்தல் களத்தில் இரு முக்கியக் கூட்டணிகளுமே அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயக்கம் காட்டி வருகின்றன.

அரபு கட்சிகள் நாட்டின் பாதுகாப்புக்கும் தேசிய அடையாளத்திற்கும் அச்சுறுத்தல் எனக்கூறி அவற்றுடன் கூட்டணி வைக்க நெதன்யாகு மறுத்துள்ளார்.

இஸ்ரேலை யூத மற்றும் ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐசென்கோட் உள்ளார்.

அதேவேளையில், நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்குத் தங்களது ஆதரவை வழங்கத் தயார் என அரபு கட்சிகளின் தலைவர்களான யூசப் ஜபரீன் மற்றும் மன்சூர் அப்பாஸ் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT