அமெரிக்கவின் புளோரிடாவில் லியர்ஜெட் விமான விபத்து: பயணித்த 9 பேரும் மரணம், வெளியானது காக்பிட் உரையாடல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 9 பேரின் உயிரைப் பறித்த லியர்ஜெட் சொகுசு விமான விபத்தின் பதறவைக்கும் கடைசி நிமிட ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் (ATC) குரல் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பனிப்பொழிவும் கட்டுப்பாடற்ற சரிவும் டெக்சாஸிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த லியர்ஜெட் 60 ரக விமானம், 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது பனிப்பொழிவு மற்றும் கடுமையான காற்றுக் கொந்தளிப்பைச் சந்தித்தது. மைனஸ் 47 டிகிரி செல்சியஸ் குளிருக்கு இடையே நிலையைச் சீரமைக்க முயன்ற நிலையில், விமானம் நிமிடத்திற்கு 10,000 அடிகள் வேகத்தில் கீழ்நோக்கி சரியத் தொடங்கியதாக காக்பிட்டில் இருந்து முதல் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடைசி நிமிடங்கள்
"நாங்கள் தரையில் மோதப்போகிறோம்"
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நிலைமையை கையாள வழிகாட்ட முயன்றபோதிலும், விமானம் மணிக்கு 20,000 முதல் 22,000 அடிகள் வேகத்தில் பாறை போல சரியத் தொடங்கியது.
"நாங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் சரியும்போது 60 டிகிரி கோணத்தில் சாய்ந்துவிட்டோம்; தரையில் மோதி விபத்துக்குள்ளாகப் போகிறோம்" என விமானி அலறியுள்ளார்.
தொடர்ந்து "வெளியே பார்... நமக்கு நேரம் முடிந்துவிட்டது!" என்ற உரத்த கத்தலுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:50 மணியளவில் பாம் பீச் கவுண்டியின் கிரெஸ்டேவன் குடியிருப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீழ்ந்து தீப்பற்றி எரிந்தது.
விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும், எஃப்ஏஏ அமைப்பும் விபத்து இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"Audio Content may not be suitable for all listeners" - ATC Audio of the accident and WHAT WE KNOW SO FAR:
— FL360aero (@fl360aero) November 1, 2026
A devastating aviation accident has claimed multiple lives after a Learjet 60 business jet crashed into a residential mobile home community in Greenacres, Palm Beach… https://t.co/IHIk8NWUth pic.twitter.com/Ujfwa6rU12
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
WATCH: New video captures the aircraft crash in Greenacres, Florida. pic.twitter.com/LTy88l1Xkz
— AZ Intel (@AZ_Intel_) November 1, 2026