Loading...
இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை; எக்சிட் போல் முடிவுகளால் நெதன்யாகுவுக்கு பின்னடைவா?
கருத்துக் கணிப்புக்கு பிந்தைய முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்பதைக் காட்டுகின்றன

இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை; எக்சிட் போல் முடிவுகளால் நெதன்யாகுவுக்கு பின்னடைவா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
09:40 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வெளியான கருத்துக் கணிப்புக்கு பிந்தைய முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்பதைக் காட்டுகின்றன. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கோ அல்லது அவரது எதிர்க்கட்சிகளுக்கோ ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்காததால் மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேலின் முக்கியத் தொலைகாட்சி ஊடகங்களான சேனல் 11, 12 மற்றும் 13 வெளியிட்ட கணிப்புகளின்படி, 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் ஆதரவுக் கூட்டணி 50 முதல் 52 இடங்களை மட்டுமே பெறக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

எக்சிட் போல்

எக்சிட் போல் கணிப்புகள் கூறுவது என்ன?

நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இது காடி ஐசன்கோட்டின் யாஷார் கட்சிக்கு கணித்துள்ள 21-22 இடங்களை விட அதிகமாகும். *

17 முதல் 18 இடங்கள் வரை வென்று அரபு சமூகப் பிரதிநிதித்துவக் கட்சிகள் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெதன்யாகுவிற்கு ஆதரவான சேனல் 14 அவரது கூட்டணிக்கு 60 இடங்களும், i24 நியூஸ் 55 இடங்களும் கிடைக்கும் எனக் கணித்துள்ளன.

வாக்குப்பதிவு

வரலாற்றுப் பதிவு எட்டிய வாக்குப்பதிவு

இத்தேர்தலில் 77.7% வாக்குகள் பதிவாகியுள்ளன (மொத்தம் 56.95 லட்சம் வாக்காளர்கள்).

இது கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான 70.6% வாக்குகளை விட மிகவும் அதிகமாகும்.

மேலும், 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம் இதுவேயாகும்.

ADVERTISEMENT

பெரும்பான்மை

ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க 120-இல் 61 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நெதன்யாகு எதிர்ப்புக் கூட்டணி அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

அதே வேளையில், அரபு கட்சிகளும் நெதன்யாகுவிற்கு ஆதரவு அளிக்காது என்பதால் இரு தரப்பாலும் 61 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை அடைய முடிவதில்லை.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியானதும், அதிபர் இஸ்ஹாக் ஹெர்ஸாக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.

எந்தவொரு கட்சியாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலை தொடர்ந்தால், இஸ்ரேல் மீண்டும் சில மாதங்களுக்குள் புதிய தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவரை நெதன்யாகு இடைக்காலப் பிரதமராக தொடருவார்.

ADVERTISEMENT