பாகிஸ்தானில் கொடூரம்: டிக்டாக் பயன்படுத்தியதாக இரு சகோதரிகளை சுட்டுக் கொன்ற சகோதரன்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ட்ரிக் ரோடு பகுதியில் அமைந்த நியூ ரஹ்மானாபாத் இல்லத்தில், சமூக வலைதளமான டிக்டாக் பயன்படுத்திய விவகாரத்தில் இரு சொந்த சகோதரிகள் அவர்களின் அண்ணனாலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷா ஃபைசல் காலனி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலையுண்ட சகோதரிகள் சோபியா(25) மற்றும் ஹீரா(20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி அவர்களின் அண்ணன் ரேஹான் என காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். SSP) ஃபிதா ஹுசைன் ஜன்வாரி கூறுகையில், தொடக்கக் கட்ட விசாரணையில் சமூக வலைதளமான டிக்டாக்கைச் சகோதரிகள் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததும், அதனைப் பயன்படுத்தக் கூடாது என அண்ணன் ரேஹான் பலமுறை எச்சரித்ததும் தெரியவந்துள்ளது.
தப்பியோட்டம்
குற்றப் பின்னணி கொண்ட கொலையாளி தப்பியோட்டம்
சகோதரிகள் இருவரையும் சுட்டுக் கொன்ற பின்னர் குற்றவாளி ரேஹான் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டான்.
அவனை கைது செய்யப் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கைதான குற்றவாளி ரேஹான் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறை சென்று வந்த குற்றப் பின்னணி கொண்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பெண்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஜின்னா மருத்துவமனைக்கு (JPMC) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.