Loading...
ஒரே ஆண்டில் தியேட்டரில் 1207 படங்கள்: அமெரிக்க இளைஞர் கிளென்வுட் ஹோஸ்கின் கின்னஸ் சாதனை
கிளென்வுட் ஹோஸ்கின் ஓராண்டில் திரையரங்கில் 1,207 படங்கள் பார்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் தியேட்டரில் 1207 படங்கள்: அமெரிக்க இளைஞர் கிளென்வுட் ஹோஸ்கின் கின்னஸ் சாதனை

எழுதியவர் Vasuki
Oct 31, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

ஒரே வருடத்தில் திரையரங்கிற்கு நேரில் சென்று அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைப் பார்த்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனை (Guinness World Records) படைத்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஹாரிஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கிளென்வுட் ஹோஸ்கின் ஜூனியர் (Glenwood Hoskin Jr.) என்ற அந்த நபர், கடந்த ஓராண்டில் மட்டும் திரையரங்குகளில் மொத்தம் 1,207 திரைப்படங்களைப் பார்த்து இந்த அசுர சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

உலக சாதனை

பழைய சாதனையை தகர்த்து புதிய உச்சம்

இதற்கு முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த சாக் சுவோப் (Zach Swope) என்பவர் ஒரே ஆண்டில் திரையரங்கில் 777 திரைப்படங்களைப் பார்த்ததே உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த சாதனையை வெகுவாக முறியடித்துள்ள கிளென்வுட் ஹோஸ்கின் ஜூனியர், முந்தைய சாதனையை விடக் கூடுதலாக 430 திரைப்படங்களை அதிகமாகப் பார்த்து, 1,207 என்ற இமாலய எண்ணிக்கையுடன் புதிய வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ளார்.

1207 படங்கள்

கடுமையான கின்னஸ் விதிகள்

இந்த கின்னஸ் சாதனை அங்கீகரிக்கப்படப் பல கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

அனைத்துத் திரைப்படங்களும் திரையரங்குகளில் மட்டுமே பார்க்கப்பட வேண்டும். இடைவேளையைத் தவிர மற்ற நேரங்களில் அரங்கிலிருந்து வெளியேறக் கூடாது.

அத்துடன் திரைப்படங்கள் முழுமையாகப் பார்க்கப்பட வேண்டும் மற்றும் கைபேசி பயன்பாடு உள்ளிட்ட எந்தவொரு வெளிப்புற கவனச்சிதறலும் இருக்கக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

திரைப்படங்கள் மீது கொண்ட தீராத காதலால் தனது உள்ளூர் திரையரங்கிற்குத் தொடர்ந்து சென்று திரைப்படங்களைக் கண்ட இவரது சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம், அவருக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளது.

ஓராண்டில் 1,207 படங்கள் என்ற இந்த விசித்திரமான அசாத்திய சாதனை இணையத்தில் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT