நெதன்யாகு அழுத்தத்தால் ஈரான் மீது டிரம்ப் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமா? டாக்கர் கார்ல்சன் அதிர்ச்சி குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக் கூடும் என அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன் தெரிவித்துள்ளார். ஈரானின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பிக்ஏக்ஸ் மலையில் அந்நாடு மீண்டும் அணுசெறிவூட்டலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை கூறுகிறது. சாதாரணக் குண்டுகளால் அழிக்க முடியாத இந்த சுரங்கங்களை அணு ஆயுதம் மூலமே அழிக்க முடியும் என நெதன்யாகு வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் தயக்கம்
300 அடி கிரானைட் பாறைகளும் டிரம்பின் முடிவில் உள்ள தயக்கமும்
300 அடி தடிமனான கிரானைட் பாறைகளுக்குக் கீழே ஈரானின் அணு மையங்கள் அமைந்துள்ளதால், வழக்கமான குண்டுகளால் அவற்றை ஊடுருவ முடியாது.
இதனால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என பெஞ்சமின் நெதன்யாகு தினமும் டிரம்பைத் தொடர்புகொண்டு அழுத்தம் தருகிறார்.
எனினும், அமைதி ஒப்பந்தத்தை வலியுறுத்தும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரின் ஆலோசனையைக் கேட்டு டிரம்ப் இதில் பெரும் தயக்கம் காட்டி வருகிறார்.
ஈரானுக்கு எச்சரிக்கை
ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் நவம்பர் 3 இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஐயோவா பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தாம் பொறுமையாக இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஈரான் மீது சுத்தியலால் அடிப்பது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அணு ஆயுத முயற்சியை நிரந்தரமாகத் தடுக்கவே இதை செய்வதாகவும் அவர் பேசினார்.
அரசியல் நெருக்கடி
நெதன்யாகுவின் அரசியல் நெருக்கடியும் உலகப் பொருளாதார அபாயமும்
கடந்த வாரம் தேர்தலில் தோற்ற நெதன்யாகு, சிறை தண்டனையிலிருந்து தப்பிக்கவே இப்போரைத் தீவிரப்படுத்த விரும்புவதாக கார்ல்சன் சாடியுள்ளார்.
அக்டோபரில் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் 11 சூப்பர்டேங்கர் கப்பல்கள் தாக்கப்பட்டதால் உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும் பிக்ஏக்ஸ் மலையில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதிலிருந்து பரவும் கதிர்வீச்சு பாரசீக வளைகுடாவில் கலந்து சுமார் 10 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாழாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Under pressure from Israeli prime minister Benjamin Netanyahu, the Trump administration may be within days of launching a nuclear strike on Iran. The target would be Pickax Mountain in central Iran, where Israeli intelligence claims the Iranian government has restarted its…
— Tucker Carlson (@TuckerCarlson) November 2, 2026