27 Jul 2024

அறிமுகமாகிய 6 மாதத்தில் 1 லட்சம் க்ரெட்டா மாடலை விற்பனை செய்து ஹூண்டாய் சாதனை 

2024 க்ரெட்டா இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு 2 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: வடக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலபகுதியை நோக்கி நகர்ந்து, இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா பகுதியில் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

கோலிவுட்: நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் போஸ்டர்களை அப்பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

உத்தரகாண்டில் நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி 

உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன.

மகளிர் ஆசியக் கோப்பை டி20: இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது இந்தியா 

மகளிர் ஆசியக் கோப்பை டி20 2024 இன் இறுதிப் போட்டியில் இந்தியா அணி இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர்.

பெங்களூரு ஹோட்டல்களில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக தகவல்: 90 இறைச்சி பெட்டிகள் பறிமுதல்

பெங்களூருவில் உள்ள மேற்குப் பிரிவு போலீஸார், KSR ரயில் நிலையத்தின் ஓகாலிபுரம் நுழைவாயிலில் நாய் இறைச்சி வைக்கப்பட்டிருந்த 90 அட்டைப்பெட்டிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

வீடியோ: விண்வெளியில் நடந்த குட்டி ஒலிம்பிக் தொடக்க விழா 

2024 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் தொடங்கியுள்ளது.

குஜராத்தில் பருவமழையால் 65 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

ஜூன் 15 முதல் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 65 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவித்துள்ளனர்.

'5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை': நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென கலந்து கொண்டார்.

பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை 

தன்னை கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சித்த சோபியா படூல் ஷா என்ற பாகிஸ்தானியப் பெண்ணை அவரது தந்தை மற்றும் மாமாக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.38% உயர்ந்து $67,882.78க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.87% உயர்வாகும்.

திடீரென்று 400 ரூபாய் உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார்.

பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது 

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள விடுதிக்குள் வைத்து 24 வயது பீகார் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மத்தியப் பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்

ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.

நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 

நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர்.

26 Jul 2024

2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மேற்கு வங்காளத்தை ஓட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி முதல் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் 49 வயதான பள்ளி வேன் டிரைவர் ஒருவர் சாலையோரம் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி சுமார் 20 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.

மகளிர் ஆசியக் கோப்பை 2024: வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற உள்ளது கர்நாடக அரசு 

ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றும் யோசனைக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஐபோன்களின் விலையை ரூ.6,000 வரை குறைக்க உள்ளது ஆப்பிள் 

ஆப்பிள் அதன் ஐபோன்களின் விலைகளை 3-4% குறைத்துள்ளது.

எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன 

சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா 

வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 4.34% உயர்ந்து $66,947.64க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 4.24% உயர்வாகும்.

தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்ப வாய்ப்பில்லை 

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக பணியாளர் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூலை மாதம் பூமிக்கு திரும்ப மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல் 

இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது இண்டியா கூட்டணி 

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 30-ம் தேதி எதிர்க்கட்சிகள் தலைமையிலான இண்டியா கூட்டணி பேரணி நடத்தும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Wi-Fi சிக்னல்களை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) தலைமையிலான ஆராய்ச்சிக் குழு ஆற்றல் அறுவடை தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு பிறகு ரூ.10,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை இழந்தது இந்திய பங்குச்சந்தை

யூனியன் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய பங்குச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ரூ.10,710 கோடியை எடுத்துள்ளனர்.

கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் 

லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக அவரது அரசுமுறைப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளுக்கு போட்டியாக SearchGPT என்ற சர்ச் எஞ்சினை களமிறக்கியது ChatGPT

கூகுளுக்கு போட்டியாக SearchGPT என்ற சர்ச் எஞ்சினை களமிறக்கி உள்ளது ChatGPT. SearchGPT என்பது AI-ஆல் இயங்கும் தேடு பொறியாகும்.