Page Loader
ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jul 27, 2024
04:38 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர். பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் இருந்ததாகவும், அவர்கள் கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். அவர்கள் பயணித்த டாடா சுமோ கட்டுப்பாட்டை இழந்து டக்சம் அருகே சாலையில் கவிழ்ந்தது. அப்பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டது. மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து