Page Loader
ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 27, 2024
11:10 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார். மேலும் ஒரு மேஜர் ரேங்க் அதிகாரி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டை இன்னும் நடந்து வருவதால், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்த வீரர்கள், நடவடிக்கை நடக்கும் தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியப் படைகளுக்கு எதிராக பாகிஸ்தான் எல்லை நடவடிக்கைக் குழு(BAT) நடத்திய தாக்குதலை இந்திய ராணுவத் துருப்புகள் முறியடித்துள்ளன.

இந்தியா 

குப்வாராவின் லோலாப் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு 

தாக்குதலில் ஈடுபட்ட BAT குழுவில் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணிபுரியும் அவர்களின் எஸ்எஸ்ஜி கமாண்டோக்கள் உட்பட வழக்கமான பாகிஸ்தான் ராணுவத் துருப்புகள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக ஜூலை 24 அன்று, குப்வாராவின் லோலாப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டார். ஆதாரங்களின்படி, சுமார் 40 முதல் 50 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குழு ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான மாவட்டங்களின் மேல் பகுதிகளில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்க அந்த பகுதிகளில் பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.