பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள விடுதிக்குள் வைத்து 24 வயது பீகார் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மத்தியப் பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டார். அபிஷேக் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, ஜூலை 23 அன்று இரவு கிருத்தி குமாரி என்ற பெண்ணை கொடூரமாகக் கொன்றுவிட்டு மத்தியப் பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார். கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க பெங்களூரில் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த பெண், தாக்குதல் நடத்தியவரது காதலியின் சக ஊழியராவார். செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் விஆர் லேஅவுட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குள் நுழைந்த குற்றவாளி, கிருத்தியின் கழுத்தை அறுத்து கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
தாக்குதலின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மூன்றாவது மாடியில் உள்ள அந்த பெண்ணின் அறைக்கு அருகே கிருத்தியின் கழுத்தை அவர் அறுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் கொலையாளி அந்த பெண்ணுக்கு தெரிந்த நபர் என்பது தெரியவந்துள்ளது. தங்கும் விடுதி உரிமையாளரின் அலட்சியமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்றும் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். தாக்குதலின் போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த குமாரி, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி வீடியோவை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.