கூகுளுக்கு போட்டியாக SearchGPT என்ற சர்ச் எஞ்சினை களமிறக்கியது ChatGPT
கூகுளுக்கு போட்டியாக SearchGPT என்ற சர்ச் எஞ்சினை களமிறக்கி உள்ளது ChatGPT. SearchGPT என்பது AI-ஆல் இயங்கும் தேடு பொறியாகும். இணையம் முழுவதிலும் உள்ள தகவல்களை தேட இது உதவும் என்று ChatGPT கூறியுள்ளது. இதன் மாதிரி வடிவமே தற்போதைக்கு வெளியிடப்பட்டுள்ளது என்றும், இது விரைவில் ChatGPTக்கு உள்ளேயே கட்டமைக்கப்படும் என்றும் சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ChatGPT நிறுவனம் தெரிவித்துள்ளது. "வெளியீட்டாளர்களுடன் பயனர்களை இணைக்க உதவும் வகையில் SearchGPT வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வழங்கும் பதில்களில் தெளிவான, இன்-லைன், பெயரிடப்பட்ட பண்புக்கூறு மற்றும் இணைப்புகள் இருக்கும். எனவே பயனர்கள் தகவல் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்வார்கள். மேலும், மூல இணைப்புகளுக்கு பக்கவாட்டில் இன்னும் அதிகமான முடிவுகள் காட்டப்படும்." என்று ChatGPT கூறியுள்ளது.