Page Loader
பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை 

பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை 

எழுதியவர் Sindhuja SM
Jul 27, 2024
01:07 pm

செய்தி முன்னோட்டம்

தன்னை கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சித்த சோபியா படூல் ஷா என்ற பாகிஸ்தானியப் பெண்ணை அவரது தந்தை மற்றும் மாமாக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுபடுத்திய கணவரிடமிருந்து விவாகரத்து கோரியதால் தனது கால்கள் துண்டிக்கப்பட்டதாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இனி அந்த பெண்ணால் நடக்கவே முடியாமல் போகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சோபியாவின் தந்தை சையத் முஸ்தபா ஷா மற்றும் அவரது மாமாக்கள் சையத் குர்பான் ஷா, எஹ்சான் ஷா, ஷா நவாஸ் மற்றும் முஷ்டாக் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பாகிஸ்தான் 

 குடும்பத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டிய அவரது பெற்றோர் 

சிறிது நேரத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோபியாவை நவாப் ஷா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாருடன் பேசிய சோபியா, ​​​​தனது கணவர் தன்னைத் தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், தங்களது இரண்டு குழந்தைகளையும் புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, விவாகரத்து கோரி அவர் மனு தாக்கல் செய்ததனால் கோபமடைந்த சோபியாவின் பெற்றோர் அவர் தனது கணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதன் மூலம் குடும்பத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர் தனது வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் அவர்கள் சோபியாவை கோடரிகளால் தாக்கினர். முஷ்டாக் என்ற சந்தேக நபரை தற்போது கைது செய்துள்ள போலீசார், பிற சந்தேக நபர்களை கண்டுபிடிக்க தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.