அறிமுகமாகிய 6 மாதத்தில் 1 லட்சம் க்ரெட்டா மாடலை விற்பனை செய்து ஹூண்டாய் சாதனை
2024 க்ரெட்டா இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, இந்த மாடல் ஆறு மாதங்களில் 1 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஒரு அறிக்கையில் கூறிய ஹூண்டாய் நிறுவனம்,சந்தையில் இந்த மாடல் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த நடுத்தர அளவிலான எஸ்யூவி ரூ.11.00 லட்சம் தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயம், இதன் டாப் மாடலை வாங்க ரூ.20.15 லட்சம் வரை(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்) ஆகலாம். தற்போது, இந்த வாகனம் சாதாரண பெட்ரோல்-எம்டி, ஆட்டோ (சிவிடி), டீசல்-எம்டி மற்றும் ஆட்டோ (டிசி), டர்போ பெட்ரோல்-ஆட்டோ (டிசிடி) மற்றும் பெட்ரோல்-எம்டி, ஆட்டோ ஆகிய எஞ்சின்களுடன் விற்கப்படுகிறது.
ஹூண்டாய் சிஓஓ தருண் கார்க் மகிழ்ச்சி
மேலும், இதற்கான காத்திருப்பு காலம் 4 முதல் 6 வாரங்கள் வரை உள்ளது. இதுகுறித்து பேசிய அந்த நிறுவனத்தின் சிஓஓ தருண் கார்க் "புதிய ஹூண்டாய் CRETA 2024 இன் குறிப்பிடத்தக்க சாதனையால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் SUV ஒரு லட்சம் விற்பனையை தாண்டி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஹூண்டாய் CRETA ஆனது இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிய அளவுகோல்களை அமைத்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறியுள்ளார். இதற்கிடையில், ஹூண்டாய் இந்திய சந்தையில் பரந்த அளவிலான மாடல்களை வழங்குகிறது. அதில் வென்யூ, எக்ஸ்டெர், கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் க்ரெட்டா ஆகியவை அதிக அளவில் விற்பனையாகும் மாடல்களாகும்.