
பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்
செய்தி முன்னோட்டம்
ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.
ரஷ்யாவுடனான போருக்குப் பிறகு உக்ரைனுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
பிரதமர் மோடி ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைன் பயணம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, இத்தாலியில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.
இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அணுசக்தி, கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்தியா
ரஷ்யாவுக்கு சென்ற பிரதமர் மோடி
கடந்த செவ்வாய்க்கிழமை மாஸ்கோவில் இரு தலைவர்களும் சந்தித்தபோது, இரு நாட்டு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் அவர்கள் விவாதித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக, பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்டல் விருதும் வழங்கப்பட்டது. அதிபர் விளாடிமிர் புடின் அந்த விருதை வழங்கினார்.
22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக புடினின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8, 2024 முதல் இரண்டு நாள் பயணமாக மாஸ்கோ சென்றார்.
இந்நிலையில், தற்போது அவர் உக்ரைன் செல்ல உள்ளார்.