ஐபோன்களின் விலையை ரூ.6,000 வரை குறைக்க உள்ளது ஆப்பிள்
ஆப்பிள் அதன் ஐபோன்களின் விலைகளை 3-4% குறைத்துள்ளது. அதனால், Pro அல்லது Pro Max மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5100 முதல் ரூ.6000 வரை சேமிக்கலாம். ஐபோன்கள் 13, 14 மற்றும் 15 உள்ளிட்டவைகளின் விலைகளில் ரூ.300 குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஐபோன் SEயின் விலையில் ரூ.2300 குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் தனது ப்ரோ மாடல்களுக்கான விலையை குறைப்பது இதுவே முதல் முறையாகும். வழக்கமாக, புதிய தலைமுறை ப்ரோ மாடல்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், ஆப்பிள் நிறுவனம் அதற்கு முந்தைய ப்ரோ மாடல்கள் தயாரிப்பை நிறுத்திவிடும்.
ஏன் இந்த திடீர் நடவடிக்கை?
ஜூலை 23 அன்று நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்த யூனியன் பட்ஜெட் 2024 இல் மொபைல் போன்களுக்கான அடிப்படை சுங்க வரியை 20% இல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டது. அதனையடுத்து, இந்த முறை ஆப்பிள் தனது ப்ரோ மாடல்களின் விலையை குறைத்துள்ளது. மொபைல் போன்களை தவிர, மொபைல் போன் சார்ஜர்கள் மற்றும் அதன் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளி ஆகியவற்றின் சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 18% ஜிஎஸ்டி மற்றும் 22% சுங்க வரி விதிக்கப்படுகிறது. வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த சுங்க வரி 16.5% ஆக இருக்கும்(15% அடிப்படை மற்றும் 1.5% கூடுதல் கட்டணம்). இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களுக்கு 18% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படுகிறது.