03 Apr 2025

25,000 வங்காள பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்ததை சரிதான்: உச்ச நீதிமன்றம் 

மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு பெரும் அடியாக, 2016 ஆம் ஆண்டில் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) செய்யப்பட்ட 24,000 நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வாகனப் பதிவு மற்றும் டெலிவரி சேவையை ஒரே நாளில் வழங்கும் ஓலா எலக்ட்ரிக் 'ஹைப்பர் டெலிவரி'

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், வாகனங்களை ஒரே நாளில் பதிவு செய்து டெலிவரி செய்வதை உறுதியளிக்கும் புதிய 'ஹைப்பர் டெலிவரி' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கு நான் பொறுப்பல்ல: நடிகர் பிரபு வாதம்

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், தயாரிப்பாளர் ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'ஜகஜால கில்லாடி' படத்திற்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் மேலே கடன் பெற்றிருந்தது.

தண்ணீர் குறைவாக குடிப்பதால் கண்களின் கீழ் கருவளையங்கள் என்பது தெரியுமா?

நீரேற்றம் என்பது பல ஆரோக்கிய மற்றும் தோல் பராமரிப்பு நன்மைகளை உடல் பெறுவதற்கான திறவுகோலாகும்.

ChatGPT-ஐப் பயன்படுத்தி உங்கள் சொந்த ஆக்‌ஷன் ஃபிகரை உருவாக்கலாம்—இதோ இப்படி

சமீப நாட்களாக மக்கள் ஸ்டுடியோ கிப்லி பாணி படங்களை உருவாக்கத் தொடங்கிய பிறகு, ChatGPT- யின் படத்தை உருவாக்கும் திறன்கள் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளன.

தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு

நீதித்துறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், உச்ச நீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் சொத்துக்களின் விவரங்களை பகிரங்கமாக வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர்.

டிரம்பின் புதிய கட்டணங்கள் ஆப்பிள் மற்றும் அமேசானை எவ்வாறு பாதிக்கலாம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வால் ஸ்ட்ரீட் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய கட்டணங்களை அறிவித்துள்ளார்.

மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது; ஏன்?

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ், மத்திய அரசிற்கு எதிராக சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு, மத்திய அரசு தனது தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது.

பென்குயின்கள் மட்டுமே வாழும் அண்டார்டிக் தீவுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்த டிரம்ப் 

ஒரு விசித்திர உத்தரவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள இரண்டு தொலைதூர எரிமலை தீவுகளான ஹியர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு: 'மைக்கேல்', இரண்டு பகுதிகளாக எடுக்க திட்டம்

பாப் ஐகான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அன்டோயின் ஃபுக்வா இயக்கும் திரைப்படம், மைக்கேல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025: விராட் கோலியின் விரலில் ஏற்பட்ட காயம் எவ்வளவு கடுமையானது?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பீல்டிங் செய்யும் போது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு விரலில் காயம் கடுமையானது இல்லை என்பதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை;சவரன் ரூ.68,480க்கு விற்பனை

கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

அமேசான் தனது முதல் இணைய செயற்கைக்கோள்களை இந்த தேதியில் ஏவவுள்ளது

உலகளாவிய அதிவேக இணைய வலையமைப்பை நிறுவுவதற்கான அதன் லட்சியத் திட்டமான ப்ராஜெக்ட் குய்ப்பருக்காக 27 செயற்கைக்கோள்களைக் கொண்ட முதல் தொகுதியை ஏவுவதாக அமேசான் அறிவித்துள்ளது.

இனி நோ-மோர் மின்சார வாகனம்! புதிய மேம்பாடுடன் ஹூண்டாயின் ஹைட்ரஜன் SUV அறிமுகம்

ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஹூண்டாய் தனது நெக்ஸோ எரிபொருள் செல் எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் 26% பரஸ்பர வரி இந்தியாவிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு பெரும் வர்த்தக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா, கனடா, வட கொரியா; என்ன காரணம்?

இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் பலவற்றின் மீதும் பரஸ்பர வரிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'இந்தியாவிற்கு 26% வரி': 'பரஸ்பர வரிகள்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று "விடுதலை நாள்" (Liberation Day)என்று அறிவித்துள்ளார்.

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

DOGE- லிருந்து எலான் மஸ்க் விரைவில் வெளியேறுவார்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அமைச்சரவை உறுப்பினர்களிடமும், நெருங்கிய உதவியாளர்களிடமும், எலான் மஸ்க் விரைவில் அரசாங்கத்தில் தனது பங்கிலிருந்து விலகுவார் என்று கூறியுள்ளார்.

உலக நாடுகள் மீது அமெரிக்காவின் 'பரஸ்பர வரிகள்': நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று "விடுதலை நாள்" (Liberation Day)என்று அறிவித்துள்ளார்.

02 Apr 2025

ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

ஐபிஎல் 2025 தொடரில் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெற்ற 14வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதின.

டிக்கெட் விலை ஆறு ரூபாய் தானா? டவுன் பஸ்ஸில் பயணித்த கேபிடல் மைண்ட் நிறுவன சிஇஓ ஷாக்

பெங்களூரின் பொது போக்குவரத்தின் மலிவு விலையை எடுத்துக்காட்டும் வகையில் கேபிடல் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான தீபக் ஷெனாய் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

2025க்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் உள்நாட்டு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் 2025 ஆம் ஆண்டுக்கான சொந்த மண்ணில் நடைபெறும் சீசனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் இல்லாதவருக்கு இடமில்லை; எதிர்க்கட்சிகள் அச்சத்தை விதைப்பதாக அமித்ஷா குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 2 ஆம் தேதி மக்களவையில் வக்ஃப் (திருத்த) மசோதா, 2025 க்கு வலுவான ஆதரவைத் தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளை நிராகரித்தார்.

ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் விளையாடும் லெவனில் ககிசோ ரபாடா சேர்க்கப்படாதது ஏன்?

ஐபிஎல் 2025 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறும் 14வது போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நாட்டில் வெளிநாட்டினரின் நுழைவு, தங்குதல் மற்றும் குடியேற்றத்தை ஒழுங்குபடுத்தும் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காரில் ஏசி பயன்படுத்துவதால் அதிக பெட்ரோல் செலவாகிறதா; நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க கார்களில் ஏசி அத்தியாவசிய தேவையாக பலருக்கும் மாறிவிட்டது.

ஐபிஎல் 2025 ஜிடிvsஆர்சிபி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறும் 14வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025: சஞ்சு சாம்சன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட பிசிசிஐ அனுமதி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2025 இல் முழு போட்டிகளில் விளையாட பிசிசிஐயின் சிறப்பு மையம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்

தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தாவை, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக மூன்று ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு நியமித்துள்ளது.

பேட்மேன் திரைப்பட ஹீரோ வால் கில்மர் உடல்நலக்குறைவால் காலமானார்

பேட்மேன் ஃபாரெவர் (1995) திரைப்படத்தில் பேட்மேனாக நடித்ததற்காகவும், டாப் கன் (1986) திரைப்படத்தில் ஐஸ்மேன் வேடத்தில் நடித்ததற்காகவும் மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் வால் கில்மர், செவ்வாய் கிழமை (ஏப்ரல் 1) அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நிமோனியா காரணமாக காலமானார். அவருக்கு வயது 65.

2024-25 நிதியாண்டில் இரு சக்கர வாகன பிரிவில் சிறந்த வருடாந்திர விற்பனையைப் பதிவு செய்த சுஸூகி

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (எஸ்எம்ஐபிஎல்) 2024-25 நிதியாண்டில் 12,56,161 யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

கச்சத்தீவை மீட்க தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவில் மார்ச் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் ₹24.77 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை

இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் பரிவர்த்தனைகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

மின்னல் கணிப்பில் மேம்பாடு; புவிசார் செயற்கைக்கோள்கள் இஸ்ரோ புதிய மைல்கல்

புவிசார் செயற்கைக்கோள்களின் தரவைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் மின்னல் கணிப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

சமையல்காரருக்கு ஒரு கோடி; வேலையாட்களுக்கு கோடிக்கணக்கான சொத்தை உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

2024 அக்டோபரில் காலமான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, தனது உயிலின்படி, தனது நீண்டகால ஊழியர்களுக்கு தனது செல்வத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை விட்டுச் சென்றார்.

மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வர உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து, ஏப்ரல் 3 முதல் 5 ஆம் தேதிக்கு இடையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்

இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

தினமும் காலையில் துளசி சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

இந்தியாவில் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி அதன் மருத்துவ மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக மிகவும் மதிக்கப்படுகிறது.