Page Loader
இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்
பாகிஸ்தானில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்

இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 02, 2025
08:43 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை (ஏப்ரல் 2) அதிகாலை பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்திய நேரப்படி அதிகாலை 2:58 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பலுசிஸ்தானில் உள்ள உத்தாலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட சமீபத்திய தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை

நிலநடுக்கங்கள்

ஆப்கானிஸ்தான், திபெத் பகுதிகளில் நிலநடுக்கம்

பாகிஸ்தானைத் தொடர்ந்து புதன்கிழமை (ஏப்ரல் 2) அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 4:52 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல், திபெத்தில் இந்திய நேரப்படி 5.41 மற்றும் 5.49 மணியளவில் அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் 3.8 மற்றும் 4.3 என்ற அளவில் மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. முன்னதாக, மார்ச் 28 அன்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தால் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.