
ஐபிஎல் 2025: சஞ்சு சாம்சன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட பிசிசிஐ அனுமதி
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2025 இல் முழு போட்டிகளில் விளையாட பிசிசிஐயின் சிறப்பு மையம் அனுமதி அளித்துள்ளது.
காயம் காரணமாக முதல் மூன்று ஆட்டங்களில் இம்பாக்ட் பிளேயராக மட்டுமே இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், ஏப்ரல் 5 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அணியை மீண்டும் வழிநடத்த தொடங்குவார்.
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது.
மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
காயம்
சஞ்சு சாம்சனுக்கு எப்போது காயம் ஏற்பட்டது?
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன் தனது விரலில் காயம் அடைந்தார், பின்னர் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதையடுத்து ஐஎல்லில் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் பணிகளை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் போட்டிக்குப் பிறகு, பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் இறுதி உடற்பயிற்சி சோதனைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 1 அன்று சாம்சன் முழு அனுமதி பெற்றார்.
அணி இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் கேப்டனாக செயல்பட உள்ளது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.