
2024-25 நிதியாண்டில் இரு சக்கர வாகன பிரிவில் சிறந்த வருடாந்திர விற்பனையைப் பதிவு செய்த சுஸூகி
செய்தி முன்னோட்டம்
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (எஸ்எம்ஐபிஎல்) 2024-25 நிதியாண்டில் 12,56,161 யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டில் விற்கப்பட்ட 11,33,902 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 11% வளர்ச்சியைக் குறிக்கிறது.
நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 14% அதிகரித்து 10,45,662 யூனிட்களை எட்டியது. இது முந்தைய ஆண்டில் 9,21,009 யூனிட்களாக இருந்தது.
இதற்கிடையில், ஏற்றுமதி 2,10,499 யூனிட்களாக இருந்தது. இது 2023-24 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 2,12,893 யூனிட்களை விட சற்று குறைவாகும்.
மார்ச்
மார்ச் 2025 விற்பனை நிலவரம்
மார்ச் 2025 இல் மட்டும், சுஸூகி 1,25,930 இரு சக்கர வாகனங்களை விற்றது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 21% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
இந்த மாதத்திற்கான உள்நாட்டு விற்பனை 23% அதிகரித்து 1,05,736 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் ஏற்றுமதிகள் மார்ச் 2024 இல் 17,505 யூனிட்டுகளிலிருந்து 20,194 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளன.
புதிய சுஸூகி அக்சஸ் ஸ்கூட்டர் மற்றும் ஜிக்ஸர் SF 250 ஃப்ளெக்ஸ்-எரிபொருள் மோட்டார் சைக்கிள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் இ-அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் நிறுவனம் மின்சார வாகன பிரிவிலும் சேவையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.