
ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் விளையாடும் லெவனில் ககிசோ ரபாடா சேர்க்கப்படாதது ஏன்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறும் 14வது போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரின் எம் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச உள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் வேகப்பந்து வீச்சார் ககிசோ ரபாடா விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.
இதற்கான காரணம் குறித்து கூறுகையில், அவர் தனிப்பட்ட காரணங்களால் இந்த போட்டியில் மட்டும் பங்கேற்கவில்லை என ஜிடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ககிசோ ரபாடா
ககிசோ ரபாடாவின் செயல்திறன்
ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்ட தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர், இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கேப்டன் ஷுப்மன் கில், ரபாடா இல்லாததை உறுதிப்படுத்தினார். மேலும், அர்ஷத் கான் இந்த போட்டியில் மாற்று வீரராக களமிறக்கப்படுவதாகக் கூறினார்.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:
ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ஜிடி: சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.