Page Loader
அடுத்த 2 நாட்களுக்கு தமிழத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
வெப்பநிலை இயல்பை விட 2°C குறைந்துள்ளது

அடுத்த 2 நாட்களுக்கு தமிழத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2025
09:05 am

செய்தி முன்னோட்டம்

வளிமண்டல சுழற்சி காரணமாக, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த வெளியான அறிவிப்பில்,"தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை குறைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது". "அதற்கடுத்த இடங்களில் கோவை மாவட்டம் மக்கினாம்பட்டி மற்றும் தேனி மாவட்டம் சோத்துப்பாறை பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பநிலை இயல்பை விட 2°C குறைந்துள்ளது."

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post