Page Loader
நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
வக்ஃப் மசோதா மீதான வாக்கெடுப்பு மக்களவையில் தொடங்கியது.

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2025
01:03 am

செய்தி முன்னோட்டம்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வந்தது. ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மற்றும் இந்தியா கூட்டணியின் வெளிநடப்பு இருந்தபோதிலும், அரசாங்கம் போதுமான வாக்குகளைப் பெறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த வகையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்ததும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன்பின்னர் நடைபெற்ற விவாதங்களுக்கு பின்னர் மசோதா மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இறுதியில் மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பெற்று, மசோதா நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பு

மசோதாவின் பகுதி வாரியாக வாக்கெடுப்பு

இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், மசோதா தாக்கல் ஆனபோது அரசு தரப்பும், எதிர்க்கட்சி எம்பி.,க்களும் காரசாரமாக விவாதம் மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 12 மணிநேரம் நீடித்த இந்த விவாதத்திற்கு பின்னர் நள்ளிரவு 12:15 மணியளவில் மசோதா மீது டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post