Page Loader
புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை;சவரன் ரூ.68,480க்கு விற்பனை
தங்கத்தின் விலை இன்று திடீர் அதிகரிப்பை கண்டது

புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை;சவரன் ரூ.68,480க்கு விற்பனை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2025
12:51 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று திடீர் அதிகரிப்பை கண்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.50 உயர்ந்து ரூ.8,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.400 உயர்ந்து ரூ.68,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.44 உயர்ந்து ரூ.9044-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.44 உயர்ந்து, சவரன் ஒன்று ரூ.74,704 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post