இந்தியா: செய்தி

துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது

பாகிஸ்தானுக்கு இரு நாடுகளும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, துருக்கி மற்றும் அஜர்பைஜானில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கான பயணங்களை இந்தியர்கள் ரத்து செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு

இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு 143(1) ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.

இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

14 May 2025

போர்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல்

பாகிஸ்தானுடனான 4 நாள் தீவிர மோதலுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள கடல்சார் துப்பாக்கிச் சூடு தளத்தில், 'பார்கவாஸ்த்ரா' என்ற உள்நாட்டு குறைந்த விலை எதிர் ட்ரோன் அமைப்பை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.

பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்திய வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சைபர் தாக்குதல்களை மகாராஷ்டிரா காவல்துறை கண்டறிந்துள்ளது.

'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமைகோரல்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளதுடன், மாநிலத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்

ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த BSF கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷா புதன்கிழமை காலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு

புது தில்லியில் உள்ள ஒரு பாகிஸ்தான் அதிகாரியை 'persona non grata' என்று இந்தியா அறிவித்த பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒரு ஊழியரையும் 'persona non grata' என்று பாகிஸ்தான் அறிவித்தது.

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

ஜூன் மாதம் முதல் அமேசான் பிரைம் வீடியோவில் Ad free சினிமா கிடையாது!

ஜூன் 17 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் போது வரையறுக்கப்பட்ட விளம்பரங்களை அறிமுகப்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது

வர்த்தக சலுகைகளுக்கு ஈடாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது

தனது பதவிக்கு ஏற்றதாக கருதப்படாத செயல்பாடுகளைச் செய்ததற்காக, பாகிஸ்தான் தூதர் ஒருவரை "நன்மதிப்பு இல்லாதவர்" என்று முத்திரை குத்தி இந்தியா வெளியேற்றியுள்ளது.

இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது?

இந்தியா தனது பாஸ்போர்ட் அமைப்பை சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டுகளுடன் (இ-பாஸ்போர்ட்) நவீனமயமாக்க உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட தற்காலிக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக கடந்த வாரம் இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசன், இந்த வார இறுதியில் மீண்டும் தொடங்குகிறது.

'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி

பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.

இந்தக் காரணங்களுக்காக தான் அமெரிக்கா இந்தியர்களுக்கு மாணவர் விசாக்களை மறுக்கிறதாம்!

இந்திய மாணவர்களுக்கான F-1 அமெரிக்க விசா நிராகரிப்புகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன.

Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

செவ்வாய்க்கிழமை ஷோபியனின் ஜின்பதர் கெல்லர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் 24x7 ஊடக சேனல்கள் வாயிலாக பரவி வரும் நிலையில், போர் பற்றி இதுவரை நேரடியாக எதிர்கொள்ளாத இளம் தலைமுறைக்கு இது ஒரு மனஅழுத்த மற்றும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

13 May 2025

மெட்டா

இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன?

அணியக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் வகையில், மெட்டா தனது ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நான்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

13 May 2025

இண்டிகோ

பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன 

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை மே 13 ஆம் தேதி பல நகரங்களுக்கான விமான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.

'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு

சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் ஹாட்லைன் உரையாடலைத் தொடர்ந்து, எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும், துப்பாக்கிச் சூட்டையும் தவிர்ப்பதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.

IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான்

திங்கட்கிழமை (மே 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை (IACCS) விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டினார்.

இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையைத் தொடங்கி உள்ளார்.

12 May 2025

ரஷ்யா

எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்

பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் ஒரு விமானம் 'சிறிதளவு சேதமடைந்ததை' பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொழிற்சாலை மற்றும் சேவை வளர்ச்சியில் உலக தரவரிசையில் இந்தியா முதலிடம்

உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகளில் இந்தியா உலகளாவிய தலைவராக மாறியுள்ளது என்று ஜேபி மோர்கனின் கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டு (PMI) தரவு காட்டுகிறது.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?

மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் துல்லியமான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்வழித் திறன்களுக்கு ஒரு தீர்க்கமான அடியைக் கொடுத்தன.

பாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம்

பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் குறிவைக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திங்களன்று உறுதிப்படுத்தினார்.

அச்சுறுத்தல் விடுக்கும் எவரையும் எதிர்கொள்ள முழுமையாக தயார்: ராணுவ தளபதி

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட தயாராக உள்ளதாக 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' (BLA) அறிவித்துள்ளது.

இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா

ஆழமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, மாலத்தீவுக்கான 50 மில்லியன் டார் நிதி உதவியை இந்திய உயர் ஆணையகம் திங்களன்று (மே 12) அறிவித்தது.

பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?

200 பக்கங்களுக்கு மேல் கொண்ட நீல நிற, limited edition அரசாங்க கையேடு தான் கடந்த வாரத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு ஒரு கையேடாகப் பயன்பட்டுள்ளது.

போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா

பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள 32 விமான நிலையங்களை இந்தியா மீண்டும் திறந்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் திங்கட்கிழமை (மே 12) காலை அறிவித்தது.

இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்

முறையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் மேஜர் ஜெனரல் காஷிஃப் சவுத்ரி ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.