
அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?
செய்தி முன்னோட்டம்
மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் துல்லியமான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்வழித் திறன்களுக்கு ஒரு தீர்க்கமான அடியைக் கொடுத்தன.
மேலும், இது இந்தியாவின் இராணுவக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன.
இந்திய விமானப்படை (IAF) பாகிஸ்தானுக்குள் உள்ள 11 ராணுவ பயன்பாட்டிற்கான விமானத் தளங்களை, குறிப்பாக ரஃபிகி, நூர் கான், சியால்கோட் மற்றும் முஷாஃப் போன்ற முக்கியமான விமானத் தளங்களை, வான்வழித் துல்லிய ஆயுதங்களைப் பயன்படுத்தி குறிவைத்தது.
அழிக்கப்பட்ட ஹேங்கர்கள், செயலிழந்த ரேடார்கள் மற்றும் ஓடுபாதைகளில் உள்ள பள்ளங்கள் உள்ளிட்ட விரிவான சேதத்தை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தின.
குறிப்பாக, ராவல்பிண்டிக்கு அருகில் அமைந்துள்ள நூர் கான் விமானத் தளத்தின் மீதான தாக்குதல் ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்பியது.
அணு ஆயுதம்
மூலோபாய அணு ஆயுத மையங்கள்
நூர் கான் விமான தளம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் தேசிய கட்டளை ஆணையம் அமைந்துள்ள பகுதியாகும்.
மேலும், சர்கோதாவில் உள்ள முஷாஃப் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின.
இந்த தளம் கிரானா மலைகளுக்கு அடியில் உள்ள நிலத்தடி அணுஆயுத சேமிப்பு தளங்களுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
இங்கு பூமியை கிழித்துக் கொண்டு ஊடுருவி சென்று தாக்கும் ஆயுதங்கள் இந்தியாவால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணு ஆயுதத்தைக் காட்டி இந்தியாவை எப்போதும் மிரட்டும் நிலையில், அந்த அணு ஆயுதங்கள் அமைந்துள்ள இடங்களின் மீதே இந்தியா தாக்குதல் நடத்தியும், பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை.
அணுக்கசிவு
அணுக்கசிவு குறித்து அச்சம்
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போன நிலையில், சம்பந்தப்பட்ட இடங்களில் அணுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.
இவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாவிட்டாலும், அமெரிக்காவின் அணுக்கசிவை ஆராயும் விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கி உள்ள தகவல் வெளியாகி, இதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
இதன் பின்னரே, பாகிஸ்தான் அமெரிக்கா மூலம் இந்தியாவிடம் மன்றாடி தாக்குதலை நிறுத்தும் முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தனது இந்திய பிரதிநிதியைத் தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார்.
இந்தியாவின் புதிய கோட்பாடு இப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒரு போர்ச் செயலாகக் கருதுகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் அணு ஆயுத நிலைகளை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தவில்லை என இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.