
இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
செய்தி முன்னோட்டம்
இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவத்தின் கிழக்கு கமாண்டு பிரிவை சேர்ந்த 'ஸ்பியர் கார்ப்ஸ்' மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து நேற்று இரவு தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டம் நியூ சம்டால் கிராமம் அருகே பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 10 பேர் உயிரிழந்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி! #SunNews | #Manipur | #Militants pic.twitter.com/qUSmvSY28Z
— Sun News (@sunnewstamil) May 15, 2025
அறிக்கை
பாதுப்புத்துறையினர் வெளியிட்ட அறிக்கை
இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: "இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சந்டெல் மாவட்டத்தின் கெங்ஜாய் தாலுகாவின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய போராளிகளின் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், ஸ்பியர் கார்ப்ஸின் கீழ் உள்ள அசாம் ரைபிள்ஸ் பிரிவு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்".
இந்தச் சம்பவம், எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை பதற்றமாகியுள்ளது.