பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
மணிரத்னத்தின் பிரமாண்ட கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்', இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.
'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது
சிலம்பரசன், கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' படத்தின் ட்ரைலர், இன்றிரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.
ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால்... விக்னேஷ் சிவன் வரிகள் உண்மையாகுமா?
'விக்னேஷ் சிவன்-அஜித் குமார் இணையும்...AK62' என இயக்குனர் விக்னேஷ் சிவன், சென்ற ஆண்டு, இதே நாளில் அறிவித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் அப்டேட், படத்தின் ஸ்பாய்லரான மொமெண்ட்!
பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாகத்திற்கான அப்டேட் நேற்று,(மார்ச்-17) மாலை வெளியானது. அதன்படி, அடுத்த வாரம், (மார்ச்-20) படத்தின் முதல் பாடலான 'அகநக' வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, சினிமாவில் நடிக்க போகிறாரா? RK செல்வமணி தகவல்
நடிகையும், தற்போதைய ஆந்திரபிரதேசத்தின் மந்திரியுமான ரோஜா மற்றும் FEFSI தலைவரும், இயக்குனருமான RK செல்வமணி தம்பதியினரின் மகள், அன்ஷுமாலிகா. இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு. அச்சுஅசல், சிறுவயது ரோஜாவை போன்றே இருக்கும் அன்ஷு மாலிகாவை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வப்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் எனவும் செய்திகள் வருவதுண்டு.
மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் 60 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா?
தமிழ் படங்களுக்கு, இந்தியா தாண்டி, ரசிகர்கள் ஏராளம் இருக்கும் நாடு மலேஷியா மற்றும் சிங்கப்பூர் தான் என கூறும் அளவிற்கு, அங்கு நம்மூர் படங்களுக்கும் நடிகர்களுக்கும் வரவேற்பும் அதிகம்.
ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா
ஆஸ்கார் விழாவில், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' வெற்றி பெற்ற பிறகு, மேடையில் பேச அனுமதிக்கப்படாதது குறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா மனம் திறந்துள்ளார்.
மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்
மும்பையில், தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. அதை நேரில் கண்டு ரசித்துளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
'அகிலன்','அயோத்தி' படங்களின் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது
ஜெயம் ரவி நடிப்பில் சென்ற வாரம் வெளியான படம் தான் 'அகிலன்'. இந்த படத்தை, என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியுடன் இணைந்து 'பூலோகம்' என்ற படத்தை தந்திருந்தார்.
"வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்": குற்றம் சுமத்தும், தயாரிப்பாளர் VA துரை
கேப்டன் விஜயகாந்த், அவர் பெயருக்கு ஏற்றார் போலவே கோலிவுட்டின் கேப்டனாக கோலோச்சியவர்.
சென்னையில் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஏ.ர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி; சேவை நேரத்தை நீட்டிப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில், வரும் ஞாயிற்றுகிழமை, இசைப்புயல் ஏ.ர். ரஹ்மான் இசை கச்சேரி நடத்தவிருக்கிறார்.
அல்லு அர்ஜுனுக்கு தாத்தாவாக கமல்ஹாசனா? வைரலாகும் புகைப்படம்
உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பேரனாக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
சிம்ரன் 50: முதல் முறையாக இந்த நடிகருடன் இணைகிறார்!
நடிகை சிம்ரனுக்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் சில காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்ரன், தற்போது தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
வெளியான கொஞ்ச நேரத்திலேயே லைக்குகளை அள்ளும் கஸ்டடி படத்தின் டீஸர்
பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிய வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியானது.
நடிகர் தனுஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பா? சர்ச்சையை கிளப்பும் ட்வீட்
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த காதல் தம்பதிகளான நடிகர் தனுஷும்- ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், விவாகரத்து பெற போவதாக, சென்ற ஆண்டு அறிவித்தனர்.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை கருத்து
ஆஸ்கார் நாயகன் என பெருமிதத்துடன் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், கர்நாடக இசை மேதை, L.சுப்பிரமணியத்துடன் நேர்காணலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று, சமீபத்தில் வைரலாகி வருகிறது.
'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை
பிதாமகனின் தயாரிப்பாளரான VAதுரை, உடல்நலம் குன்றி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு நிதி உதவி செய்வதற்கு முன் வந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவருடன் தொலைபேசியில் பேசி, நம்பிக்கையூட்டினார் எனவும் கூறப்பட்டது.
துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல்
விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016-இல் தொடங்கப்பட்ட படம் 'துருவநட்சத்திரம்'. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம், பல காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
கோடிகளில் சம்பளம் வாங்கும் சீதாராமம் நடிகை மிருணாள் தாக்கூர்
'சீதாராமம்' படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகத்திற்கு பரிச்சயமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் சிரஞ்சீவி
தென்னிந்தியாவில் பிரபலமான வில்லன் நடிகர் பொன்னம்பலம். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தோன்றி இருந்தார்.
வெங்கட் பிரபு- நாக சைதன்யா 'கஸ்டடி' படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது
தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் ஒருசேர தயாராகி இருக்கும் 'கஸ்டடி' திரைப்படம், மே 12 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.
'அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட', என ராகவா லாரன்ஸை புகழ்ந்த கங்கனா
நடிகை கங்கனா, தற்போது 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
நடிகர் சிம்பு படத்தில், சிறப்பு தோற்றத்தில் கமல் நடிக்கப்போகிறாரா?
நடிகர் சிலம்பரசன்- இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இணையும் அடுத்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்கப்போவதாக சென்ற வாரம் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
கோவிலில் சிறப்பு பூஜை செய்த சமந்தா; ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் குழப்பம்
பிறப்பால் கிறிஸ்துவரான நடிகை சமந்தா, நடிகர் நாகா சைதன்யாவை திருமணம் செய்த போது, இரு மதங்களையும் தழுவியே திருமண நிகழ்வு நடைபெற்றது. காலை ஹிந்து முறைப்படியும், மாலை, கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதன் பின்னர், இருவருக்கும் விவாகரத்தான பின்னர், தனது தோழியுடன், ஹரித்துவாருக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அப்போதே பல ஊடகங்கள், சமந்தா ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டார் என செய்திகள் வெளியிட்டன.
எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்
இந்த வாரம், கிட்டத்தட்ட 5 படங்கள் ரசிகர்களுக்காக வெளிவர போகிறது. அதில் 3 படங்கள் வெள்ளித்திரையில் வெளிவரும் நேரத்தில், மற்ற 2 படங்கள், OTT தளத்தில் வெளிவர போகிறது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
"உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா!" :மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம்
'இயக்குனர் இமயம்' என மரியாதையோடு அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களில் நடிகர் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். அவர் படங்கள் இயக்கம் போதே, நடிகர்களுக்கு, காட்சி நடித்து காட்டி, இயக்குவார் என்று பரவலான பேச்சு உண்டு.
'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற, 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படத்தில், நடித்திருந்த, பொம்மன், பெள்ளி தம்பதியரை, இன்று தலைமை செயலகத்தில், நேரில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
சிம்புவின் 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என அறிவிப்பு
சிம்பு, கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
நயன்தாரா கூறியதன் பேரில், ரஜினி படத்திலிருந்து நீக்கப்பட்டாரா மம்தா மோகன்தாஸ்?
தமிழ் மொழியில், ஒன்றிரண்டு படங்களே நடித்திருந்தாலும், மலையாளத்தில் இன்றும் பிரபலமாக இருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.
நாகா சைதன்யாவினால் அபார்ஷன் செய்த சமந்தா? ரசிகர்கள் அதிர்ச்சி
இரு தினங்களுக்கு முன்னர், உமைர் சந்து என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், சமந்தா கூறியதாக ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், திருமண வாழ்க்கையில், சமந்தாவை, நாகா சைதன்யா அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் கொடுமை தாளாமல், அப்போது கர்ப்பமாக இருந்த சமந்தா, அபார்ஷன் செய்ய நேர்ந்ததாகவும், நல்ல வேளையாக தான் விவாகரத்து பெற்று விட்டதாக சமந்தா கூறியதாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
இன்று முதல், சென்னையில் துவங்கவிருக்கும் ஈரானிய படவிழா
சென்னையில், பல உலக திரைப்படவிழாக்கள் நடைபெறுவதுண்டு.
வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
இன்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள். தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அவருக்கு, படக்குழுவினர், பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள்
திரையுலகில் சமீப காலங்களில் பல திறமையுள்ள நடிகர், நடிகைகள் நிறைய பேர் நடிக்க வருகின்றனர்.
கீரவாணி ஆஸ்கார் வென்றதை அடுத்து ரசூல் பூக்குட்டியை ட்ரோல் செய்தவருக்கு 'நச்' பதில் தந்த ரசூல்
நேற்று, (மார்ச் 13) அன்று நடைபெற்ற ஆஸ்கார் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்தியாவிலிருந்து தேர்வான 'RRR ' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலாக தேர்வானது.
'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள்
வாரந்தோறும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாக இருக்காது. சில சின்ன பட்ஜெட் படங்களும் வரும். அவற்றிற்கு தியேட்டர் கிடைப்பதே அரிது. இதில் விளம்பரத்திற்கு எல்லாம் அந்த தயாரிப்பாளரால் செலவு செய்ய முடியாது. ஆனால் நல்ல படங்கள், விளம்பரமே இல்லையென்றாலும், தமிழ் ரசிகன், அதை தவற விடமாட்டான், என பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள்.
'கைதி தொடங்கி லியோ வரை': LCU-வின் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று!
கோலிவுடின் இன்றைய தலைமுறை இயக்குனர்களில், பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெற்றி படங்களை தந்த இயக்குனரான லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் இன்று.
ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்
'The Elephant Whisperers' என்ற ஆவணப்படம் இன்று ஆஸ்கார் விருதை வென்றது. தாயை பிரிந்த குட்டி யானைகளும், அவற்றை பராமரிக்கும் பாகனுக்கும் இடையிலான பந்தத்தை பற்றியது இந்த படம்.
"அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது": மனம் திறந்த விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன், AK 62 படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக செய்திகள் வந்ததை அடுத்தும், மௌனம் காத்துவந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில், தனது மகனுடன் ஒரு பதிவை இட்டு, மறைமுகமாக AK 62 படத்தில் இருந்து விளக்கப்பட்டதற்கும், தன்னுடைய அடுத்த கட்ட பிளான்களை பற்றியும் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவிலிருந்து, உலக அரங்கில் சென்று, ஆஸ்கார் விருதுகளை வென்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவர்களுக்கு கிடைத்த பாராட்டுகளால், இந்தியா பெருமையடைந்ததாக கூறினார்.
ஆஸ்கார் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
அகாடமி விருது என அழைக்கப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் விருது வென்ற படங்களும், அவற்றை எங்கு பார்க்கலாம் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.