
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை கருத்து
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கார் நாயகன் என பெருமிதத்துடன் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், கர்நாடக இசை மேதை, L.சுப்பிரமணியத்துடன் நேர்காணலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று, சமீபத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில், ரஹ்மான், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட அந்த நேர்காணலை, தற்போதுதான் சுப்ரமணியம் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
A.R.ரஹ்மான், நம் நாட்டிலிருந்து ஆஸ்கார் விருதுகளுக்கு பல படங்கள் பரிந்துரைக்க படுவதையும், பின்னர் அது நிராகரிக்கப்படுவதையும் குறித்து வருந்தி பேசி இருந்தார்.
அப்போது, அவர், தவறான படங்களை தேர்வு செய்வதை விட, உலக மக்களின் ரசனைக்கு ஏற்ற படங்களை அனுப்ப வேண்டும் என்பது போல கருத்தை கூறி இருந்தார்.
"நாம் மற்றவர் இடத்தில் இருந்து யோசிக்க வேண்டும்" எனவும் ரஹ்மான் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல்
Creating Magic with Music- @arrahman conversation with Dr. L Subramaniam https://t.co/TbGUHUFG12
— JaiHoARRClub (@JaiHoARRClub) March 15, 2023